கரூரில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு
கரூர் நகரட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம் மற்றும் குளத்துபாளையம் பகுதிகளில், ரூ.13.2 கோடியில் நடைபெற்று வரும், குகை வழிப்பாதை அமைக்கும் பணிகள், வாங்கல் ரோடு பகுதியில் நகராட்சிக்குட்பட்ட, திடக்கழிவு மேலாண்மை பணிகளையும், உர கிடங்கினையும், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கலெக்டர் கோவிந்தராஜ் நேரில் ஆய்வு செய்தனர்.
ஆலோசனைகள்
பின்னர், வாங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற, புதிய வாக்காளர் சேர்க்கும் முகாமினையும் ஆய்வு செய்தார். உரக்கிடங்கில் ஆய்வு செய்த அமைச்சர், சுற்றுப்புறத்தை துய்மையாக வைத்துக்கொள்ளவும், பணிகள் மேம்பாட்டிற்கும் ஆலோசனைகள் வழங்கினார்.
ஆய்வின் போது அமைச்சர் தெரிவித்தாவது:-–
கரூர் ரெயில்வே நிலையத்திலிருந்து செல்லும் பொதுமக்கள், நகரின் போக்குவரத்து நெரிசலின்றி, புறவழிச்சாலை வழியாக செல்ல ஏதுவாக, அணுகு சாலையுடன் கூடிய குகைவழிப் பாதை அமைக்கும் பணிகள், பசுபதிபாளையத்தில் முடிவடைந்துவிட்டது. குளத்துபாளையம் பகுதியில் இன்னும், ஓரிரு மாதங்களுக்குள் பணிகள் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் என தெரிவித்தார்.
ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ், ஆணையர் அசோக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் காளியப்பன், நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.