அணில் சேமியா நிறுவனத்தின் “ஜிஎஸ்டி திட்டம்”
ஜிஎஸ்டி குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அணில் சேமியா நிறுவனம், புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்து உள்ளது.
1984ஆம் ஆண்டு முதல் ’அணில் சேமியா’, தென் இந்தியாவின் முன்னனி சேமியா விற்பனையாளராக உள்ளது. மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி, ஜூலை 1 ஆம் தேதி அமலுக்கு வந்துள்ள நிலையில், அணில் சேமியா குழுவினர் ‘ஜிஎஸ்டி என்ற அமைப்பை தொடங்கியுள்ளனர்.
‘ஜிஎஸ்டி எம்ஐடிஆர்’ என்ற செயல்முறை திட்டம், மூன்று கட்டங்களாக உள்ளது. இந்த செயல்முறையில், விற்பனையாளர்களும், விநியோகஸ்தர்களும், ஜிஎஸ்டி குறித்த விவரங்கள் மற்றும் வரிவிதிப்பின் தாக்கத்தைக் பற்றி தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
’ஜிஎஸ்டி, எம்ஐடிஆர்’ திட்டத்தின் மூலம், விற்பனையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் ஜிஎஸ்டி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், விற்பனையில் உள்ள கணக்கியல் மற்றும் வரிநடைமுறை குறித்த தெளிவான உள்கட்டமைப்பும் அமைத்து தர, அணில் சேமியா குழுமம் முடிவெடுத்துள்ளது.
இது குறித்து, ’ஜிஎஸ்டி எம்ஐடிஆர் அணில் சேமியா நிர்வாக இயக்குநர் கமலஹாசன் பேசியதாவது:–
“அணில் சேமியா தயாரிப்புகள் இந்தியா மற்றும் உலகெங்கும் பிரபலமான, உயர்தர உணவுபொருட்கள் தயாரிக்கும் பிராண்டுகளில் ஒன்றாகும். சேமியா வகைகள் தயாரித்து, விற்பனை செய்வதில், அணில் சேமியா முதலிடத்தில் உள்ளது.
அன்றும் இன்றும் முதலிடம்
வறுத்த சேமியா, ராகி, ரவா வகைகள், அணில் குழுமத்தில் இருந்து விற்பனை செய்யப்படுகிறது. நிலையான தரம், கவர்ச்சிகரமான பேக்கேஜ், நியாயமான விலை, ஆரோக்கியமான உணவு தயாரிப்பு போன்ற காரணத்தினால், அணில் சேமியா அன்றும் இன்றும் முதலிடத்தில் உள்ளது.
அணில் உணவு பொருட்கள் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரபிரதேசம், கேரளா, மும்பை ஆகிய மாநிலங்களுக்கும், அந்தமான், துபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.” என்றார்.
இது குறித்து, அணில் சேமியா இயக்குநர் சுகுமார் கூறுகையில்,- அணில் குழுமம் என்றைக்கும் விற்பனையாளர்களுக்கும் விநியோகிஸ்தர்களுக்கும் விற்பனையில் ஆதரவு அளித்து வந்துள்ளது. ‘ஜிஎஸ்டி எம்ஐடிஆர் திட்டம் தெளிவான விற்பனை நோக்குடன் செயல்பட உதவும்.
இத்திட்டத்தின் மூலம், விற்பனையாளர்கள், விநியோகிஸ்தர்கள், பயன்பெற்று வாடிக்கையாளர்களும் பயன்பெறும் வகையில், இத்திட்டத்தை கொண்டு செல்வர் என்ற நம்பிக்கைஉள்ளது” என்று கூறினார். நிகழ்வின் போது, நிறுவனர் விஜய்குமார் மற்றும் அணில் குழுமம் பொதுமேலாளர் ரவிசந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.