கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகும் 2,000 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்துக்கு தருவது குறித்து பரிசீலனை: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

கூடங்குளம் அணுமின் நிலையத் தில் உற்பத்தி செய்யப்படும் 2,000 மெகாவாட் மின்சாரம் முழு வதையும் தமிழகத்துக்கு தருவது குறித்து பரிசீலிக்கப்படும் என மத்திய எரிசக்தி துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

தமிழகத்தில் மத்திய அரசு செயல்படுத்திவரும் மின்திட்டங் களை மத்திய எரிசக்தி துறை அமைச்சர் பியூஷ் கோயல் சென்னையில் நேற்று ஆய்வு செய்தார். தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, மின்வாரி யத் தலைவர் சாய்குமார், எரிசக்தி துறை செயலாளர் விக்ரம் கபூர் உள்ளிட்ட உயர் அதிகாரி கள் அப்போது உடன் இருந் தனர். ஆய்வுக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது:

ஜிஎஸ்டியை அமல்படுத்தி யுள்ளதன் மூலம், நிலக்கரிக் கான செஸ் வரி ரத்து செய்யப் பட்டுள்ளது. இதனால், என்எல்சி நிறுவனத்துக்கு ரூ.508.54 கோடி மிச்சமாகியுள்ளது. தமிழ்நாடு மின்உற்பத்தி, பகிர்மானக் கழகத் துக்கு கடந்த 2013-14 ஆண்டில் ரூ.13,985 கோடி நஷ்டம் ஏற்பட் டது. இது கடந்த 2016-17 ஆண்டில் ரூ.3,783 கோடியாக குறைந் துள்ளது.

தமிழகத்தில் மின்சாரத்தை சேமிக்கும் திட்டங்களை செயல் படுத்த இஇஎஸ்எல் நிறுவனம் மூலம் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.11 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. செய்யூரில் 4,000 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் திட்டத்துக்குத் தேவை யான நிலக்கரி, தமிழகத்தின் நிலக்கரித் தொகுப்பில் இருந்து வழங்கப்படும்.

கூடங்குளம் அணுமின் நிலை யத்தின் 4, 5-வது அணு உலையில் உற்பத்தி செய்யப்படும் 2,000 மெகாவாட் மின்சாரத்தை முழு வதுமாக தமிழகத்துக்கு தர வேண்டும் என கோரிக்கை விடுக் கப்பட்டுள்ளது. இது நியாயமான கோரிக்கை. இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.

பின்னர், தலைமைச் செயலகத் தில் முதல்வர் கே.பழனிசாமியை பியூஷ் கோயல் சந்தித்துப் பேசினார். அப்போது முதல்வர், ‘‘செய்யூர் மெகா மின்திட்டத்துக்கு பிரத்யேக நிலக்கரித் தொகுப்பை அமைக்க வேண்டும். காற்றாலை மின்சாரத்தை விற்பதற்காக மாநி லங்கள் இடையே பசுமை வழித் தடம் அமைக்க வேண்டும். கூடங் குளம் அணுமின் நிலையத்தின் 4, 5-வது அணு உலையில் உற்பத்தி செய்யப்படும் 2,000 மெகாவாட் மின்சாரம் முழுவதையும் தமிழகத் துக்கு தர வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தார்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பியூஷ் கோயல் கூறும்போது, ‘‘உதய் திட்டம் மூலம் தமிழகத்துக்கு 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும். 3 மாதங் களுக்கு ஒருமுறை மின்கட்ட ணத்தை மாற்றி அமைக்கும் எண்ணம் இல்லை. அது தவறான தகவல்’’ என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *