வருவாய்த்துறையில் விஏஓ உள்ளிட்ட காலிப் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி
விஏஓ உள்ளிட்ட வருவாய்த்துறை காலிப்பணியிடங்களை அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமும், பதவி உயர்வு மூலமும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் வருவாய்த் துறை மானிய கோரிக்கை மீது நடந்த விவாதம் பற்றிய விவரம் வருமாறு:
அரவிந்த் ரமேஷ் (திமுக):
வருவாய்த்துறையில் அதிகளவில் காலிப்பணியிடங்கள் உள்ளன. இவற்றால், வருவாய்த்துறை பணிகளில் சுணக்கம் ஏற்பட்டு வருகிறது. முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா, சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்த சோழிங்கநல்லூர் மேம்பாலப்பணி இதுவரை தொடங்கப்படவில்லை.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்:
துணை ஆட்சியர் காலிப்பணி யிடங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு அறிக்கை தமிழ்நாடு அரசுப்பணி யாளர் தேர்வாணையத்திடம் வழங்கப்பட்டுள்ளது.
வட்டாட்சியர், துணை வட்டாட் சியர் பணியிடங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, காலிப் பணி யிடங்களை பணி மூப்பு மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட நிலைகளில் காலிப்பணியிடங் கள் மதிப்பிடப்பட்டு, அவற்றை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. மீத முள்ள பணியிடங்கள் கருணை அடிப் படையிலான நிய மனங்கள் மூலம் நிரப்பப்படும். கடந்த 2011 முதல் 17-ம் ஆண்டு வரை 20 ஆயிரத்து 979 பணியிடங்கள் நிரப்பப்பட் டுள்ளன.
கடந்த திமுக ஆட்சியில் 16 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. தற்போது விஏஓ பணிக்கு உயர் தகுதியுள்ளவர்கள் தேர்வா கின்றனர். அவர்கள் தொடர்ந்து தேர்வெழுதி வேறு பணிக்கு சென்றுவிடுவதால் அவ்வப் போது காலியிடம் ஏற்படுகிறது. இவற்றை நிரப்ப அவ்வப்போது நடவடிக்கை எடுக்கப்படு கிறது.
முதல்வர் கே.பழனிசாமி:
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் மறைந்த முதல்வர் அறிவித்த மேம்பால திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அப்பகுதியில் மெட்ரோ ரயில் பகுதி 2- திட்டமும் வர உள்ளது. இரு திட்டங்களையும் ஒரே நேரத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதால், கால தாமதம் ஏற்படுகிறது.
இவ்வாறு விவாதம் நடந்தது.