ரிலையன்ஸ் ஜியோ அடுத்த ரீசார்ஜ் விலை மற்றும் சலுகைகள் அறிவிப்பு

ரிலையன்ஸ் ஜியோ தண் தணா தண் சலுகை இம்மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதைத் தொடர்ந்து ஜியோ தண் தணா தண் சலுகைகளை மாற்றியமைத்து புதிய விலையை ஜியோ அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்த சம்மர் சர்ப்ரைஸ் சலுகைகள் டிராய் அறிவுறுத்தலின் படி ஜியோ திரும்பப் பெற்றது. எனினும் வாடிக்கையாளர்களுக்கு தண் தணா தண் எனும் சலுகையை அறிவித்தது. தண் தணா தண் சலுகையின் கீழ் வழங்கப்பட்ட 84 நாள் வேலிடிட்டி இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது.
ஏப்ரல் மாதம் ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட தண் தணா தண் சலுகைகள் ரூ.309-க்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் தண் தணா தண் பேக் நிறைவுற்றதும் வாடிக்கையாளர்கள் ஜியோ சேவைகளை தொடர மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
அதன்படி ரூ.309 விலையில் தண் தணா தண் சலுகையில் 84-நாள் வேலிடிட்டி வழங்கப்பட்டது, இதன் வேலிடிட்டி 56-நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கும் 84 நாள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தின் விலை ரூ.399-ஆக மாற்றப்பட்டுள்ளது.
தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் ஜியோ ரூ.509 திட்டத்தின் வேலிடிட்டி 84-நாட்களில் இருந்து 56-நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. பழைய ரூ.999, ரூ.1999, ரூ.4999 மற்றும் ரூ.9999 திட்டங்களின் வேலிடிட்டி நீட்டிக்கப்பட்டு அதிக டேட்டா வழங்கப்படுகிறது. இதேபோல் ரூ.149 மற்றும் இதர துவக்க திட்டங்களில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை.
போஸ்ட்பெயிட் திட்டங்களிலும் வேலிடிட்டி மற்றும் டேட்டா நீட்டிக்கப்பட்டுள்ளது. ரூ.399 திட்டத்தில் மூன்று மாதங்கள் வேலிடிட்டி மற்றும் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இவை அனைத்திற்கும் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *