அமர்நாத் யாத்ரீகர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் – உள்துறை அமைச்சர் உயர்நிலை அதிகாரிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை
தீவிரவாதிகளால் அமர்நாத் யாத்ரீகர்கள் 7 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, எழுந்துள்ள நிலைமை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் இன்று உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் குகைக் கோயிலுக்கு சென்ற யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 7 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து எழுந்துள்ள நிலைமை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் தலைமையில், இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், உள்துறை செயலர், உளவுத்துறையான ‘ரா’ பிரிவு தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை கூட்டத்திற்கு ஜம்மு காஷ்மீர் மாநில கவர்னர் வோரா அழைப்பு விடுத்துள்ளார்.