சென்னை எழும்பூரில் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானத்தில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நேரில் ஆய்வு
சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானத்தில் அமைச்சர் திரு. கே.ஏ. செங்கோட்டையன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானத்தில், ஹாக்கி, டென்னிஸ் மற்றும் கைப்பந்து விளையாடுவதற்கு ஏதுவாக களங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மைதானத்தில், ஆயிரக்கணக்கான வீரர் வீராங்கனைகள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த விளையாட்டு மைதானத்தை பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு நலத்துறை அமைச்சர் திரு. கே.ஏ. செங்கோட்டையன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, மைதானத்திற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை செயலர் தீரஜ்குமார் மற்றும் கழக நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.