சென்னை அருகே வங்க கடலில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய 3 நாடுகளின் கூட்டு கடற்பயிற்சி : அமெரிக்க கடற்படை வீரர்களுடன், சென்னை கடற்படையினர் கூடைப்பந்து போட்டி
சென்னை அருகே வங்க கடலில், இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய 3 நாடுகளின் கூட்டு கடற்பயிற்சி தொடங்கியதன் ஒரு பகுதியாக, அமெரிக்க கடற்படை வீரர்களுடன், சென்னை கடற்படையினர் இணைந்து கூடைப்பந்து போட்டியில் பங்கேற்கின்றனர்.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய 3 நாடுகள் இணைந்து, வங்க கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை, கூட்டாக கடற்படை பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. ‘மலபார்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த கூட்டுப்பயிற்சி சென்னை மற்றும் விசாகப்பட்டினத்தை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் 2 கட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அரபிக்கடல் பகுதியில் ஏற்கெனவே பயிற்சி தொடங்கப்பட்டுள்ள நிலையில், வங்கக்கடல் பகுதியில் இந்த கூட்டுப்பயிற்சி நேற்று தொடங்கியது.
இந்த பயிற்சியின் ஒருபகுதியாக சென்னை நந்தனத்தில் உள்ள ஓய்.எம்.சி.ஏ. உடற்கல்வி மையத்தில், இன்று, அமெரிக்க கடற்படை வீரர்களுடன், இந்திய கடற்படையினர் இணைந்து கூடைப்பந்து போட்டியில் பங்கேற்கின்றனர்.