ஜிகா வைரஸ் குறித்து தமிழகத்தில் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தகவல்
ஜிகா வைரஸ் குறித்து தமிழகத்தில் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்ற மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.