துணை ஜனாதிபதி தேர்தல் – கோபால கிருஷ்ண காந்தியை நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவு ?
துணை ஜனாதிபதி தொடர்பாக எதிர்க்கட்சிகள் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தியை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துணை ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் தலைநகர் புதுடெல்லியில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய ஜனதா தளம் கட்சி மூத்த தலைவர் சரத் யாதவ் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தியை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 18 எதிர்க்கட்சிகளும் ஒருமனதாக இந்த முடிவினை பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.
முன்னதாக, எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளருக்கு கோபால கிருஷ்ன காந்தியின் பெயர் பல்வேறு தரப்பினரால பரிந்துரை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.