அபோலோ ஹாஸ்பிட்டல்ஸ் தொடர்ந்து நான்காவது ஆண்டாக 100 முதியோர் இல்லங்களைச் சென்றடைந்திருக்கிறது!

சென்னை, ஜூலை 7, 2017: அபோலோ பார்மசி அண்ட் அபோலோ மருத்துவமனைகளின்

கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை [AHERF], தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப்

பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் செயல்பட்டுவரும் 100 முதியோர்

இல்லங்கங்களுக்கு இலவச மருந்துகள் வழங்குவதன் மூலம் ஒரு புதிய மைல்கல்லை

அடைந்துள்ளது. 2014-ல் முதியோர் இல்லங்களில் வசிக்கும் ஏழை முதியோர்களுக்கு

இலவசமாக மருந்துகள் வழங்கும் APOLLO AUSHAD என்னும் இந்த திட்டம் அபோலோ

மருந்தகம் மற்றும் AHERF ஆகியவற்றின் முயற்சினால் தொடங்கப்பட்டது. Apollo Aushad

குழுவின் இந்த உயரிய பணியை 'அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைசஸ்

லிமிடெட்டின் தலைமை செயல் அதிகாரி திரு. சுப்பையா அவர்கள் பாராட்டி கெளரவித்தார்.

இந்நிகழ்வில் பேசிய 'அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைசஸ்

லிமிடெட்டின் தலைமை செயல் அதிகாரி திரு. சுப்பையா அவர்கள் "இந்தியாவில்

தற்போது 60 வயதை விட அதிக வயதுள்ளவர்கள் 95 மில்லியன் பேர் உள்ளனர். 2025-ம்

ஆண்டு வாக்கில் இந்த மக்கள்தொகையானது இன்னும் அதிக 80 மில்லியன் கூடுதலாக

சேர்ந்து அதிகரித்துவிடும். நமது நாட்டில் மேம்படுத்தப்பட்ட ஆயுட்காலம் மூலம்,

தற்போது 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் 8 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கிறார்கள்

என மதிப்பிடப்பட்டுள்ளது. குடும்ப மதிப்பீட்டு முறையை மாற்றுதல், குழந்தைகள்

மூலமான பொருளாதார அவசியங்கள், முதியோர்கள் புறக்கணிப்பு மற்றும் அவர்கள்

மீதான முறைகேடு ஆகியவை குடும்பத்தின் நலன்களின் அவசியத்தை அதிகரித்து இருக்கின்றன.’’

மேலும் அவர் கூறுகையில், "முதியோர் இல்லங்களில் உள்ள பெரும்பாலான மூத்த

குடிமக்களுக்கு, வயது மூப்பு பிரச்சினைகளின் காரணமாக அவர்களுக்கு தொடர்ந்து மருந்துகள்

தேவைப்படுகின்றன. அபோலோ மருத்துவமனையின் இந்த முன்முயற்சியானது, தமிழ்நாடு, ஆந்திரப்

பிரதேசம், தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்கள் முழுவதும் பரவலாக செயல்பட்டுவரும் 100

முதியோர் இல்லங்களில் வசித்துவரும் மூத்த குடிமக்களுக்கு தேவைப்படும் மருந்துகளை

உடனடியாகவும், குறித்த நேரத்திலும் இலவசமாக வழங்கியுள்ளது."

முதியோர் இல்லங்களில் வசிக்கும் மூத்த குடிமக்கள் தங்களுக்கான அன்றாட

மருத்துகளை வாங்குவது என்பது அவ்வளவு சுலபமில்லை. என்று தனது நன்றியுணர்வை

வெளிக்காட்டிய அன்னை பாத்திமா டிரஸ்ட்டின் நிறுவனர், திருமதி. ராணி கிருஷ்ணன், "மருந்துகளின்

விலை நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே செலவதால், தேவையான நிதியுதவிகள்

எதுவுமில்லாமல் முதியோர் இல்லங்களில் வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு அன்றாடம்

அவசியமான மருந்துகளை வாங்குவது என்பது சிரமமாகி இருக்கிறது. 60 வயதுக்கு

மேற்பட்ட முதியோர்கள் இல்லவாசிகளில் பெரும்பாலானோர் இதய நோய், நீரிழிவு நோய், உயர்

/ குறைந்த இரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளை கொண்டிருப்பதால், அவர்களுக்கு தினசரி

உட்கொள்ள வேண்டிய மருந்துகள் தேவைப்படுகின்றன. அபோலோவின் Aushad குழுவினர்

சரியான நேரத்தில் எங்களை அணுகி, இலவசமாக மருந்துகளை வழங்கி உதவினர்.. பல ஆண்டுகளாக

சமூகத்திற்கு சேவை செய்யும் வகையில் அர்ப்பணிப்புடன் மேற்கொண்டிருக்கும்

அவர்களுடைய சேவைக்காக அபோலோ ஹாஸ்பிட்டல்-க்கு எனது இதயப்பூர்வமான நன்றியை

தெரிவித்து கொள்கிறேன்." என்றார்.

தொலைத்தூர பகுதிகளில் இயங்கிவரும் பெரும்பாலான முதியோர் இல்லங்கள்,

தேவைப்படுகிற அடிப்படை சுகாதார வசதிகளை மிகக்குறைந்த அளவிலேயே

பெற்றிருக்கின்றன. உடனடியாக வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை மற்றும்

அவர்களுக்கான சேவைகள், முதியோர் இல்லங்களில் வசிக்கும் மூத்த குடிமக்களை

உடல்ரீதியாகவும், உளவியல்ரீதியாகவும் மேம்பட உதவி புரிந்துள்ளன. அபோலோ

ஹாஸ்பிட்டல்ஸின் இந்த முன்முயற்சி தமிழ்நாட்டில் 55 முதியோர் இல்லங்களையும்,

தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் 23 முதியோர் இல்லங்களையும்,

கர்நாடகாவில் 22 முதியோர் இல்லங்களையும், சென்றடைந்திருக்கிறது. 4,532 க்கும்

மேற்பட்ட மூத்த குடிமக்கள், தங்களது மாதாந்திர மருத்துவத்தைப் பெறுகிறார்கள்.

மேலும் கடந்த நான்கு ஆண்டுகளில் 3.624 பேர் இந்த திட்டத்தின் மூலமாக

தங்களுக்கென தனிப்பட்ட மருந்துகளைப் பெற்று பயனடைந்திருக்கிறார்கள்.

தொலைத்தூரத்தில் இருக்கும் பெரும்பாலான முதியோர் இல்லங்கள் சுகாதார

வசதிகள் குறைவான நிலையிலேயே செயல்பட்டு வருகின்றன.

இந்நிகழ்வில் அபோலோ Aushad முன்னெடுக்கப்படுகின்ற சமூக பொறுப்புணர்வு

திட்டங்களின் வெற்றிக்கு மகத்தான ஆதரவு அளிக்கும், அபோலோ பார்மசியின் தலைமை நிர்வாக

அதிகாரி திரு.ஸ்ரீதர், , அபோலோ பார்மசியின் சிஓஓ திரு ரவிச்சந்திரன், தலைமை செயல் அதிகாரி,

அப்பல்லோ பார்மசி, திருமதி ஜெயந்தி சுவாமிநாதன், இயக்குனர் மெடிக்கல் ஆபரேஷன்ஸ், AHERF

(அப்பல்லோ மருத்துவமனைகள் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை), திருமதி மைதிலி ஸ்ரீராம்,

ஆலோசகர் முன்னிலையில் கண்டது மருத்துவ சேவைகள் இயக்குனர், அபோலோ ஹாஸ்பிட்டல்ஸின்

பெருநிறுவன சமூகப்பொறுப்புணர்வு செயல்பாடுகள், டாக்டர். சத்யா பாமா இயக்குநர்

மெடிக்கல் சர்வீசஸ், தெற்கு பிராந்தியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *