ஈரோட்டில் மண்டல கிரிக்கெட்போட்டி
ஈரோட்டில் மண்டல அளவிலான, ‘இசெட் டிராபி’ என்ற கிரிக்கெட் போட்டியை எம்எல்ஏ கே.வி.ராமலிங்கம் துவக்கி வைத்தார். இந்த போட்டியானது, கருங்கல்பாளையம் காமராஜர் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு, எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு முன்னிலை வகித்தார்.
ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த, 50 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. போட்டிகள், ‘நாக் அவுட்’ முறையில் நடைபெற்றது. முடிவில், பெஸ்ட் கிரிக்கெட் அணி முதலிடத்தையும், இசெட் பாய்ஸ் அணி 2வது இடத்தையும், ஐசிசி கிரிக்கெட் அணி 3வது இடத்தையும், ஹான்சின்ஹா அணி 4வது இடத்தையும் பிடித்தது.
பரிசளிப்பு விழா
விழாவில், பகுதி செயலாளர்கள் முருகசேகர், ஜெகதீஷ், கேசவமூர்த்தி, கோவிந்தராஜர், முன்னாள் நகரச்செயலாளர் மார்க்கெட் ராஜா, பேரவைத் துணைச் செயலாளர் சோழா லோகநாதன், பேரவை இணைச்செயலாளர் பாவை அருணாச்சலம், மகளிர் அணி துணைச்செயலாளர் பாப்பாத்தி மணி, முன்னாள் கவுன்சிலர் கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து, பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில், வேளாண்மை உற்பத்தி கூட்டுறவு சங்க இயக்குநர் ரமேஷ்குமார், பிரபுதேவா, இளைஞர் அணி பொறுப்பாளர் ஜெயின், சென்னிமலை ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் தாளாளர் மக்கள் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.
விழாவில், தலைமையாசிரியர் சோமசுந்தரம், செந்தில், ஏ.கே.எஸ்.வைரவேல், தியாகராஜன், பிரேம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.