ஈரோடு மக்கள் குறைகேட்பு கூட்டம்

ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், மொத்தம் 297 மனுக்களை, மாவட்ட வருவாய் அலுவலர் பெற்றுக்கொண்டு, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும் பல்வேறு முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.

17 பேருக்கு நலத்திட்ட உதவி

கூட்டத்தில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ், சாலை விபத்தில் காயமடைந்தவர், நீரில் மூழ்கி இறந்தவர் மற்றும் மின்சாரம் தாக்கி இறந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலைகள், 3 பேருக்கு தலா ரூ.6,500 வீதம் ரூ.19,500 மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்கள், ஒரு பயனாளிக்கு ரூ.4,000 மதிப்பிலான இலவச சலவைப்பெட்டி, 3 பேருக்கு கல்வி உதவித்தொகையாக தலா ரூ.10,000 வீதம் ரூ.30,000க்கான காசோலைகள், மருத்துவ மற்றும் பராமரிப்பு உதவித்தொகையாக 3 பேருக்கு தலா ரூ.10,000 வீதம் ரூ.30,000 க்கான காசோலைகள் என மொத்தம் 17 பயனாளிகளுக்கு ரூ.1,83,500 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை, மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா வழங்கினார்.

கூட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் எஸ்.வி.குமார், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் என்.ராமச்சந்திரன் உட்பட அனைத்து துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *