கிருஷ்ணகிரி மாணவர்களுக்கு உதவித்தொகை

 

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் கதிரவன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து மொத்தம் 216 மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார்.

உதவித்தொகை

தொடர்ந்து, சென்னப்பநாய்க்கனூர் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்புப்பயிற்சி மையத்தில் பயின்று, தற்போது கல்லூரியில் பயிலும் மாணவன் கார்த்தி, கோவை மற்றும் அஞ்செட்டி சிறப்புப்பயிற்சி மையத்தில் பயின்ற மாணவன் மகான் ஆகியோர், தொடர்ந்து கல்வி பயில, அரிமா சங்கம் அளித்த, ரூ.15,000 கல்வி உதவித்தொகையினை, கலெக்டர் கதிரவன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின் போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாந்தி, உதவி கமிஷ்னர் (ஆயம்) கீதாராணி, மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன், மாவட்ட ஆதிதிராவிடர் அலுவலர் வீ.சிவசங்கரன், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு, மாவட்ட பிற்பட்டோர் நலத் துறை அலுவலர் அ.அய்யப்பன், தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்ட இயக்குநர் பிரியா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *