கோவையில் 8 பேருக்கு ரூ.2 லட்சம் உதவி
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், திங்கட்கிழமை தோறும் நடைபெறும், மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், பொதுமக்கள், பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்கள், கலெக்டரிடம் அளித்தனர்.
தொழில் துவங்க உதவி
தொடர்ந்து, தாட்கோ மூலம் 20 பேருக்கு, சுய தொழில் தொடங்க தலா ரூ.20,000 வீதமும், 8 பேருக்கு ரூ.1.60 லட்சம் மதிப்பில் நிதியுதவியினையும், கலெக்டர் ஹரிஹரன் வழங்கினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், துணை ஆணையர் (கலால்) பாலகிருஷ்ணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலர் சுரேஷ், ஆதி திராவிட நல அலுவலர் மோகன், துணை மேலாளர் தாட்கோ கீதா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.