சேலத்தில் 8 பயனாளிகளுக்கு உதவி

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் சம்பத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை, உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 293 மனுக்கள் வரப்பெற்றது.
கூட்டத்தில், 6 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலிக்கருவி ரூ.7,500 மதிப்பிலும், முதியோர்கள் 5 பேருக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணை, கலெக்டரின் விருப்புரிமை நிதியிலிருந்து, நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றும் கல்வி உதவித்தொகை உள்ளிட்டவைகளுக்கு, 8 பயனாளிகளுக்கு ரூ.56,000 க்கான காசோலைகள் உள்ளிட்ட, நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சம்பத் வழங்கினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) அமுதவள்ளி உள்ளிட்ட அனைத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *