நீலகிரியில் ‘பேஷன்ஷோ’
நீலகிரி மாவட்டம் ஊட்டியில், ‘மிஸ் பிரின்ஸ்சஸ் ஊட்டி’ என்ற பட்டத்திற்காக நடைபெற்ற, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் 15 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். உல்லன் பிரிவு, இந்திய கலாச்சார உடைகள் பிரிவு, தனித்திறமைகள் மற்றும் கேள்வி பதில் என பல பிரிவுகளில் இப்போட்டி நடத்தப்பட்டது.
இளம் பெண்கள், தங்கள் தனித் திறமைகளை காட்டும் விதத்தில், விதவிதமான உடைகள் அணிந்து, ஒய்யாரமாக நடந்து, பாட்டுப்பாடி நடனமாடி இசைகருவிகளை இசைத்து, பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.
போட்டி நடுவர்களாக, பெங்களூரை சேர்ந்த அழகி பட்டம் வென்றவர்கள் பணியாற்றினர். அழகி போட்டியை, ஏராளமான சுற்றுலா பயணிகள், பொது மக்கள் கண்டு களித்தனர் இப்போட்டியில், கட்டிட கலை பயிலும் கல்லூரி மாணவி நிதிஸ்ரேயா, தனது அதிரடியான தனித்திறமைகள் மூலம், அனைத்து தரப்பினரையும் கவர்ந்து, ‘மிஸ் ஊட்டி’ பட்டத்தை, பலத்த வாழ்த்துக்களிடையே பெற்றார்.
இவர், பத்தாம் வகுப்பு ஊட்டி நசரத் பள்ளியிலும், 11, 12ம் வகுப்பு ஷில்டாஸ் பள்ளியிலும் பயின்று, தற்போது மைசூர் பல்கலைகழகத்தில், கட்டிட கலை பயின்று வருகிறார். இவரின் தந்தை பிரபாகரன் செய்தியாளராகவும், தாய் செண்பகமாலினி பிரபல வழக்கறிஞர் என்பதும் குறுப்பிடத்தக்கதாகும்.
இரண்டாம் இடத்தை, ஷில்டாஸ் பள்ளி மாணவி நிமிஷாவும், மூன்றாம் இடத்தை ஜெஎஸ்எஸ் கல்லூரி மாணவி அக்ஸிதாவும் வென்றனர்.