மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் 37 மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை: கமிஷனர் அனீஷ் சேகர் உத்தரவு

மதுரை மாநகராட்சி மண்டலம் 2 அலுவலகத்தில் இன்று கமிஷனர் அனீஷ் சேகர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 37 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
மதுரை ரேஸ்கோர்சில் உள்ள மண்டலம். 2 அலுவலகத்தில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் கமிஷனர் அனீஷ் சேகர் தலைமையில் இன்று நடைபெற்றது. இம்முகாமில் குடிநீர், பாதாள சாக்கடை, வீட்டு வரி, கட்டிட வரைபட அனுமதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 37 மனுக்கள் பொது மக்களிடமிருந்து கமிஷனர் பெற்று பரிசீலனை செய்தார். பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். சென்ற குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மனுதாரர்களுக்கு பதில் கடிதம் அனுப்பிய விவரப்பதிவேட்டையும் ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக டி.ஆர்.ஓ. காலனி மெயின் ரோடு மற்றும் 1 முதல் 5 வரையுள்ள தெருக்கள், குறுக்குத் தெருக்கள், ஜவஹர்புரம், புதூர் வண்டிப்பாதை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற தீவிரப் துப்புரவுப்பணியினை ஆய்வு மேற்கொண்டார். மேலும் துப்புரவுப் பணியாளர்கள், அம்மா திட்டப் பணியாளர்கள், ஒப்பந்தப்பணியாளர்கள் ஆகிய பணியாளர்களின் வருகைப் பதிவேட்டினை ஆய்வு செய்து பணியாளர்கள் முறையாக பணிநேரத்திற்கு வந்துள்ளார்களா என்றும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த குறைதீர்க்கும் முகாமில் துணை கமிஷனர் ப.மணிவண்ணன், நகரப்பொறியாளர் மதுரம், நகரமைப்பு அலுவலர் ஐ.ரெங்கநாதன், உதவி கமிஷனர் (வருவாய்) ரெங்கராஜன், உதவி நகர்நல அலுவலர் பார்த்திப்பன், செயற்பொறியாளர் ராஜேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன், உதவி பொறியாளர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *