தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் சாதனை மதுரை பள்ளி மாணவருக்கு கலெக்டர் வீரராகவ ராவ் பாராட்டு

புனேயில் நடைபெற்ற தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் தேசிய சாதனை புரிந்த மதுரை பள்ளி மாணவர் பி.விகாஷ் –ஐ மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
மதுரையைச் சேர்ந்த மாணவர் பி.விகாஷ் லீ சார்ட்லியர் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர். அண்மையில் புனேவில் நடைபெற்ற 44–வது தேசிய அளவிலான ஜூனியர் நீச்சல் போட்டிகளில் மதுரையிலிருந்து 3 வீரர்கள் பங்கேற்றனர். இவர்களில் விகாஷ் 14 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் 50 மீட்டர் ப்ரீ ஸ்டைலில் தங்கம் வென்றார். இவர் 24.76 வினாடிகளில் அந்த தொலைவை அடைந்து தேசிய அளவில் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.
மாணவர் விகாஷ் 100 மீட்டர் ப்ரீ ஸ்டைல் நீச்சலிலும் தங்கம் வென்றுள்ளார். தேசிய அளவிலான நீச்சலில் இரு போட்டிகளில் தங்கம் வென்று தேசிய சாதனையும் நிகழ்த்திய விகாஷ் 50 மீட்டர் பட்டர்பிளை ஸ்ட்ரோக் நீச்சலில் வெள்ளிப் பதக்கத்தையும் 4 ஆயிரத்து 100 மீட்டர் பட்டர்பிளை ப்ரீஸ் டைல் ரிலே நீச்சலில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளனார். நான்கு பதக்கம் மற்றும் இரு புதிய தேசிய சாதனைகள் நிகழ்த்திய மாணவர் விகாஷ் புனேவிலிருந்து திங்கள்கிழமை மதுரை திரும்பினார். அவருக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ்.முருகன், நீச்சல் பயிற்சியாளர் ஜான்சிராணி உள்ளிட்டோர் வரவேற்பளித்தனர். பின்னர் அவர் மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *