சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எப்போதும் அனல் காற்றால் தவிக்கும் சென்னை நகர மக்கள் இப்போது இதமான காற்றை சுவாசிக்கிறார்கள். சென்னை மக்களின் மனதை குளிர வைத்த ‘திடீர்’ மழை சென்னை: மழை பெய்யாததால் ஏரி, குளங்கள், கிணறுகள் வறண்டு தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை கை கொடுத்தால் மட்டுமே இனி வாழ முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. குடம் குடிநீருக்கு தவிக்கும் நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் கோடை மழை ஒரு துளி கூட பெய்யாமல் முற்றிலும் வறண்டு கிடந்தது. ஆழ்துளை கிணறுகள் எல்லாவற்றிலும் நீர் மட்டம் குறைந்து தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டது. இந்த நிலையில் 2 நாட்கள் பெய்த மழை பூமியின் வெப்பத்தை தணித்துள்ளது. எப்போதும் அனல் காற்றால் தவிக்கும் சென்னை நகர மக்கள் இப்போது இதமான காற்றை சுவாசிக்கிறார்கள். சென்னையில் திடீர் மழை பெய்து மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. எப்போதும் சுட்டெரிக்கும் வெயிலின் உஷ்ணத்தில் சென்றுவரும் வாகன ஓட்டிகள் தற்போது பெய்த மழையால் உள்ளம் குளிர்ந்துள்ளனர். நகரில் ஒரு சில பகுதியில் பலத்த மழையும் ஒரு சில இடங்களில் லேசான மழையும், சில பகுதிகளில் மழை பெய்யாமலும் உள்ளன. ஆனால் இந்த மழை சென்னை மக்களுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு கிடைத்திருப்பதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் 2-வது நாளாக அநேக பகுதிகளில் மழை பெய்தது. நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த போதிலும் நள்ளிரவில் மழை பெய்ய தொடங்கியது. சென்னையில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ததால் சாலைகளில் ஒருசில இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது. அதிகாலை பெய்ய தொடங்கிய மழை காலை வரையில் சிறு சிறு தூரல்களாக தூரிக் கொண்டே இருந்தன. சென்னையை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளிலும் விடிய விடிய மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குடிநீர் தட்டுப்பாட்டில் சிக்கி தவிக்கும் சென்னை மக்களுக்கு இந்த மழை சற்று ஆறுதலை தந்துள்ளது. 2 நாட்கள் மழை பெய்துள்ளதால் கிணறுகள் நிரம்பி வருகின்றன. தண்ணீர் இல்லாமல் வற்றிய ஆழ்துளை கிணறுகளில் கூட இப்போது நீர்மட்டம் உயர்ந்து தண்ணீர் வருகிறது. கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவில் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திடீரென்று மழை பெய்தது. கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, ஸ்ரீமுஷ்ணம், நாச்சியார்பேட்டை, புதுக்குப்பம், அக்ரகாரம், காட்டுமயிலூர், விருத்தாசலம், வேப்பூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இரவு 8 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. 10 மணி வரை மழை பெய்து கொண்டிருந்தது. காட்டுமன்னார்கோவில், புவனகிரி, சேத்தியாத்தோப்பு, அண்ணாமலை நகர் போன்ற பகுதிகளிலும் மழை பெய்தது. விழுப்புரம் மாவட்டத்திலும் நேற்று பகலில் வெயில் கொளுத்தியது. மாலை நேரத்தில் குளிர்ந்த காற்று வீசியது. இரவு 7 மணி அளவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென மழை பெய்தது. விழுப்புரம், அனந்தபுரம், காணை, உளுந்தூர்பேட்டை, பள்ளியம் தாங்கல், அஜிஸ்நகர், செங்குறிச்சி, விக்கிரவாண்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் கடந்த மாதம் 30-ந் தேதி 3,365 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் 7-ந்தேதி மதியம் மேட்டூர் அணைக்கு 1000 கன அடியாக வந்து சேர்ந்தது. பின்னர் படிப்படியாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து 10-ந் தேதி 2,687 கன அடியானது. நேற்று 2,919 கன அடியாக அதிகரித்த நீர் வரத்து இன்று மேலும் உயர்ந்து 3 ஆயிரம் கன அடியானது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரை விட அணைக்கு பல மடங்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 21.75 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 22.42 அடியானது. இனி வரும் நாட்களில் தண்ணீர் வரத்து அதிகரித்தால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்புள்ளது. ஒகேனேக்கல் காவிரி ஆற்றிலும் 3 ஆயிரம் கன அடிக்கும் மேல் தண்ணீர் வருவதால் ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அணைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எப்போதும் அனல் காற்றால் தவிக்கும் சென்னை நகர மக்கள் இப்போது இதமான காற்றை சுவாசிக்கிறார்கள்.
மழை பெய்யாததால் ஏரி, குளங்கள், கிணறுகள் வறண்டு தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழை கை கொடுத்தால் மட்டுமே இனி வாழ முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
குடம் குடிநீருக்கு தவிக்கும் நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் கோடை மழை ஒரு துளி கூட பெய்யாமல் முற்றிலும் வறண்டு கிடந்தது.
ஆழ்துளை கிணறுகள் எல்லாவற்றிலும் நீர் மட்டம் குறைந்து தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டது. இந்த நிலையில் 2 நாட்கள் பெய்த மழை பூமியின் வெப்பத்தை தணித்துள்ளது.
எப்போதும் அனல் காற்றால் தவிக்கும் சென்னை நகர மக்கள் இப்போது இதமான காற்றை சுவாசிக்கிறார்கள்.
சென்னையில் திடீர் மழை பெய்து மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. எப்போதும் சுட்டெரிக்கும் வெயிலின் உஷ்ணத்தில் சென்றுவரும் வாகன ஓட்டிகள் தற்போது பெய்த மழையால் உள்ளம் குளிர்ந்துள்ளனர்.
நகரில் ஒரு சில பகுதியில் பலத்த மழையும் ஒரு சில இடங்களில் லேசான மழையும், சில பகுதிகளில் மழை பெய்யாமலும் உள்ளன. ஆனால் இந்த மழை சென்னை மக்களுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு கிடைத்திருப்பதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் 2-வது நாளாக அநேக பகுதிகளில் மழை பெய்தது. நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த போதிலும் நள்ளிரவில் மழை பெய்ய தொடங்கியது.
சென்னையில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ததால் சாலைகளில் ஒருசில இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது.
அதிகாலை பெய்ய தொடங்கிய மழை காலை வரையில் சிறு சிறு தூரல்களாக தூரிக் கொண்டே இருந்தன. சென்னையை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளிலும் விடிய விடிய மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குடிநீர் தட்டுப்பாட்டில் சிக்கி தவிக்கும் சென்னை மக்களுக்கு இந்த மழை சற்று ஆறுதலை தந்துள்ளது.
2 நாட்கள் மழை பெய்துள்ளதால் கிணறுகள் நிரம்பி வருகின்றன. தண்ணீர் இல்லாமல் வற்றிய ஆழ்துளை கிணறுகளில் கூட இப்போது நீர்மட்டம் உயர்ந்து தண்ணீர் வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவில் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திடீரென்று மழை பெய்தது.
கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, ஸ்ரீமுஷ்ணம், நாச்சியார்பேட்டை, புதுக்குப்பம், அக்ரகாரம், காட்டுமயிலூர், விருத்தாசலம், வேப்பூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இரவு 8 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. 10 மணி வரை மழை பெய்து கொண்டிருந்தது.
காட்டுமன்னார்கோவில், புவனகிரி, சேத்தியாத்தோப்பு, அண்ணாமலை நகர் போன்ற பகுதிகளிலும் மழை பெய்தது.
விழுப்புரம் மாவட்டத்திலும் நேற்று பகலில் வெயில் கொளுத்தியது. மாலை நேரத்தில் குளிர்ந்த காற்று வீசியது. இரவு 7 மணி அளவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென மழை பெய்தது. விழுப்புரம், அனந்தபுரம், காணை, உளுந்தூர்பேட்டை, பள்ளியம் தாங்கல், அஜிஸ்நகர், செங்குறிச்சி, விக்கிரவாண்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் கடந்த மாதம் 30-ந் தேதி 3,365 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் 7-ந்தேதி மதியம் மேட்டூர் அணைக்கு 1000 கன அடியாக வந்து சேர்ந்தது.
பின்னர் படிப்படியாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து 10-ந் தேதி 2,687 கன அடியானது. நேற்று 2,919 கன அடியாக அதிகரித்த நீர் வரத்து இன்று மேலும் உயர்ந்து 3 ஆயிரம் கன அடியானது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரை விட அணைக்கு பல மடங்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
நேற்று 21.75 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 22.42 அடியானது. இனி வரும் நாட்களில் தண்ணீர் வரத்து அதிகரித்தால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்புள்ளது.
ஒகேனேக்கல் காவிரி ஆற்றிலும் 3 ஆயிரம் கன அடிக்கும் மேல் தண்ணீர் வருவதால் ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அணைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *