சர்வதேச பெட்ரோலியம் மாநாடு: துருக்கி அமைச்சருடன் தர்மேந்திர பிரதான் சந்திப்பு
சர்வதேச பெட்ரோலியம் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக துருக்கி சென்றுள்ள மத்திய பெட்ரோலியம் துறை மந்திரி தர்மேந்திர பிரதான், அந்நாட்டு எரிசக்தி அமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
22-வது சர்வதேச பெட்ரோலியம் மாநாட்டு துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்தியா சார்பில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார். மாநாட்டின் நடுவே பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மந்திரிகளை பிரதான் சந்திது ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், மாநாட்டின் நடுவே துருக்கி எரிசக்தி துறை அமைச்சரை தர்மேந்திர பிரதான் சந்தித்தார். அப்போது, எரிசக்தி, புதுபிக்கக் கூடிய ஆற்றல் உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளின் ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
வருகின்ற காலங்களில் சில முக்கிய திட்டங்களில் இருநாடுகளும் இணைந்து பணியாற்ற பரஸ்பரம் ஒப்புதல் அளித்தனர். அதேபோல், மூன்றால் உலக நாடுகளிடையே இணைந்து பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
மேலும், இந்தியா போன்ற நடுத்தர வர்க்க ஆசிய நாடுகளில் நிலவும்ம் மின்சாரம், சமையல் மற்றும் போக்குவரத்கு ஆயுள் போன்றவற்றிற்கான ஆற்றலின் தேவையை எடுத்துரைத்தார்.