தீவிரவாத தாக்குதலுக்கு பின்னர் நேற்று 11 ஆயிரம் யாத்ரீகர்கள் பனி லிங்க தரிசனம்

அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பின்னர் நேற்று மட்டும் 11 யாத்ரீகர்கள் பனி லிங்கத்தை தரிசித்துள்ளனர்.
ஜம்மு – காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். இந்த ஆண்டு தரிசனத்தையொட்டி யாத்ரீகர்களின் முதல் குழுவினர் கடந்த 28-ம் தேதி பயணத்தை தொடங்கினர். முதல் நாளாக 2,280 யாத்ரீகர்கள் மலையடிவாரத்தில் இருந்து அமர்நாத் ஆலயத்துக்கு புறப்பட்டு சென்றனர்.

யாத்திரையின் 12-வது நாளான நேற்று முன்தினம் அனந்தநாக் மாவட்டத்தின் வழியாக வந்த யாத்ரீகர்களின் பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 7 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், யாத்திரையின் 13-வது நாளான நேற்று 10,926 பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசித்துள்ளதாக ஆலைய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதுவரை மொத்தம் 1,57,618 யாத்ரீகர்கள் தரிசனம் செய்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *