ஓசூரில் சிலம்பாட்டப் போட்டி
கிருஷ்ணகிரி மாவட்ட சிலம்பம் விளையாட்டு சங்கம், ஓசூர் மக்கள் சங்கம் சார்பில், முதலாம் ஆண்டு மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டி, பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் காமராஜ், சிலம்பாட்ட விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். ராயல் வெல்பிட் மேனேஜிங் டைரக்டர் ராமலிங்கம், சிலம்பாட்டப் போட்டிகளை துவக்கி வைத்தார்.
24 பேர் தேர்வு
இந்த போட்டிகளில், காவேரிபட்டிணம், தேன்கனிக்கோட்டை, ஓசூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 200 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்தபோட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்கள், ஈரோட்டில் மாநில அளவில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். மாநில அளவில் நடக்கும் போட்டியில் கலந்து கொள்ள, 24 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில், ஓசூர் மக்கள் சங்கத் தலைவர் செல்வகுமார், பொருளாளர் ராமலிங்கம், போர்ட்ஸ் கமிட்டி தலைவர் வரபிரசாத், சிலம்பாட்ட குழுவின் தலைவர் பிரேமா, செயலாளர் சரவணன், அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். நடுவர்களாக, மண்டல செயலாளர் சுகுமார், யுவராஜ், நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.