மக்கள் சிந்தனைப் பேரவையின் புத்தகத்திருவிழா

ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் புத்தகத்திருவிழாவை முன்னிட்டு, மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி, மாநிலம் முழுவதும், 16ந் தேதி முதல் நடைபெற உள்ளது.

மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில், ஆகஸ்ட் 4 ந் தேதி தொடங்கி, 15 ஆம் தேதி வரை என, 12 நாட்களுக்கு வஉசி பூங்காவில், புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது. திருவிழாவை முன்னிட்டு, கல்லூரி மாணவ – மாணவியர் பங்கேற்கும், மாநில அளவிலான பேச்சுப்போட்டி தமிழகத்தின் 4 மையங்களில் நடைபெறவுள்ளது.

சென்னையில் 16 ந்தேதி

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், சென்னை மையத்தில், ஜூலை 16ந் தேதி ஞாயிற்றுக்கிழமை, கிழக்குத் தாம்பரம், ஜெய்கோபால் கரோடியா நேஷனல் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் போட்டியிலும், மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களிலுள்ள மாணவர்கள் மதுரை மையத்தில் 22ந் தேதி சனிக்கிழமை, பசுமலை, மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரியில் நடைபெறும் போட்டியிலும் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஈரோட்டில் 29 ந்தேதி

தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், பெரம்பலூர்ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரி மாணவர்கள், தஞ்சாவூர் மையத்தில் 23ந் தேதி ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டைரோடு, கமலா சுப்ரமணியம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் போட்டியிலும், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரி மாணவர்கள் ஈரோடு மையத்தில் 29ந் தேதி பெருந்துறைரோடு, யுஆர்சி பழனியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் போட்டியிலும் பங்கேற்கலாம்.

30 ந்தேதி இறுதிப்போட்டி

முதல் சுற்றுக்கான தலைப்பு, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ ஆகும். ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும், தேர்வு செய்யப்பட்ட 3 பேர், முதல்வரின் அறிமுகக் கடித்தத்துடன் போட்டியில் பங்கேற்கலாம். ஒவ்வொரு மையத்திலிருந்தும், தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, ஜூலை 30ந் தேதி, ஈரோட்டில் இறுதிச்சுற்றுப் போட்டி நடைபெறும். முதல் பரிசாக ரூ10,000, 2ம்பரிசாக ரூ.5,000, 3ம் பரிசாக ரூ.3,000 மற்றும் புத்தகங்களும் சான்றிதழும், புத்தகத்திருவிழா மேடையில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *