கோவையில் ‘அக்ரி இன்டெக்ஸ்’ கண்காட்சி
வேளாண்மை துறையில், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை, விவசாயிகள் கண்டு பயன்பெறலாம் என்று, கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் சுந்தரம், சவுந்தரராஜன், பாலு ஆகியோர் தெரிவித்தனர்.
கண்காட்சி குறித்து, வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி கூறியதாவது:–
விவசாயத்துறை வளர்ச்சி பெற வேண்டும் என்றால், வரி இல்லாமல் இருக்க வேண்டும். அல்லது குறைக்க வேண்டும். ஜூலை 14ந் தேதி துவங்கும் ‘ அக்ரி இன்டெக்ஸ்’ கண்காட்சி, வேளாண்மை துறையை சார்ந்தவர்களுக்கு, பயனுள்ளதாக இருக்கும். நிலத்தடியில் குறைந்த அளவு நீர் அதாரம் இருக்கும் பட்சத்தில், சிறுதானிய பயிர்களை, குறுகிய கால பயிர் விவசாயம் செய்யலாம்.
அதிகளவில் நிலத்தடி நீர் இருப்பின் நெல், வாழை போன்ற நீண்ட கால பயிர்களை விவசாயம் செய்யலாம். தற்போது, மத்திய அரசு, வேளாண்மை துறையில் ஈடுபட்டுள்ளோருக்கு, செயற்கை உரங்களை பயன்படுத்துவோருக்கு 5 சதமும், இயற்கை உரங்களை பயன்படுத்துவோருக்கு 18 சதமும் வரி விதித்துள்ளது. இந்த வரியை குறைக்க வேண்டும் என்று கூறினார்.
கண்காட்சி குறித்து, தலைவர் சவுந்தரராஜன் கூறியதாவது:–
கொடிசியா தொழிற் அமைப்பு, ஆண்டுதோறும் பல்வேறு கண்காட்சிகளை நடத்தி வருகிறது. இதில், தொழில்த்துறையினர் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் பயன் பெற்று வருகின்றனர். கொடிசியா சார்பில் நடத்தப்படும், அனைத்து கண்காட்சிகளும், பல்வேறு மாநிலங்களை தாண்டி, வெளி நாட்டினரையும் ஈர்த்து வருகிறது.
தற்போது, வேளாண்மை துறையில் ஏற்ப்பட்டுள்ள முன்னேற்றங்களை, விவசாயிகளுக்கு கொண்டு செல்லும் வகையில், ‘அக்ரி இன்டெக்ஸ்’ என்ற கண்காட்சியை, 14ந் தேதி வெள்ளிக்கிழமை துவங்கி, தொடர்ந்து 3 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வல்லுனர்கள் மற்றும் விவசாயிகள், தொழில் நுட்ப கருவிகள் தயாரிப்பாளர்கள் என 400 ஸ்டால்கள் இடம்பெறுகின்றன என்று கண்காட்சி தலைவர் சவுந்தரராஜன், கொடிசிய தலைவர் சுந்தரம், செயலாளர் பாலு மற்றும் ராம்பிரசாத் ஆகியோர் தெரிவித்தனர்.நிகழ்ச்சியில், மத்திய மாநில அரசுகளின் அமைச்சர்கள், அதிகாரிகள், வேளாண்மை துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை வரை இந்த கண்காட்சி நடைபெற உள்ளது.