ஈங்கூரில் மாநில அளவிலான யோகா போட்டி
ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள ஈங்கூரில், மாநில அளவிலான யோகாசன போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 300 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஈங்கூர் மகரிஷி பள்ளியில் நடந்த போட்டியை, பள்ளி நிறுவனர் ஈஸ்வரமூர்த்தி தொடங்கி வைத்தார். கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, தருமபுரி உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 300 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இதில் வெற்றி பெறுவோர், தாய்லாந்து நாட்டில் அடுத்த மாதம் நடக்கும், உலக யோகா போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெறுவர்.
சிறப்பு விருந்தினராக, 98 வயதான நானம்மாள் கலந்து கொண்டு, பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தினார். பின்னர், போட்டியில் வெற்றி பெற்ற, மாணவ மாணவியருக்கு பரிசு வழங்கினார்.