செங்கோடம்பாளையம் அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம்
ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, திண்டல் செங்கோடம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், ஒரு கோடியே 68 லட்சம் ரூயாய் மதிப்பில், கூடுதலாக 9 வகுப்பறைகள் கட்டுவதற்கான பணியை, எம்எல்ஏ கே.வி.ராமலிங்கம், பூமி பூஜை செய்து, துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு, எம்பி செல்வகுமார சின்னையன், எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எம்எல்ஏ கே.வி.ராமலிங்கம் பேசியதாவது:-–
அண்ணா திமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை, சட்டமன்ற உறுப்பினர்கள் மரியாதை நிமித்தமாகவே சந்தித்து வருகின்றனர். அண்ணா திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும், ஒரே அணியில் தான் உள்ளனர். தமிழகத்தில் அண்ணா திமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். அண்ணா திமுகவில் பிளவுகள் உள்ளது என, ஊடகங்கள் தான் கூறி வருகிறது என்றார்.
நிகழ்ச்சியில், திண்டல் வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகரன், மாவட்ட கல்வி அதிகாரி ரமேஷ், தலைமையாசிரியை அமுதா, மாநகர பகுதி செயலாளர்கள் கேசவமூர்த்தி, சூரம்பட்டி ஜெகதீஷ், கோவிந்தராசர், முருகசேகர், மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளர் ஜெயபாலாஜி, மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் தங்கவேலு, இளங்கோ, ராஜ்குமார், மாநகர் மாவட்ட நெசவாளர் பிரிவுச்செயலாளர் கே.எஸ்.நல்லசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.