கூடங்குளம் மாணவர்கள் 3 பேர் இன்று ரஷியா பயணம்

கூடங்குளத்தை சேர்ந்த 3 மாணவர்கள் இன்று ரஷியா செல்கிறார்கள். ரஷியாவில் இம்மாணவர்களுக்கு இசை, நடனம், நீச்சல் மற்றும் உடற்பயிற்சி போன்ற பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
கூடங்குளத்தை சேர்ந்த 3 மாணவர்கள் இன்று ரஷியா செல்கிறார்கள். ரஷியாவில் இம்மாணவர்களுக்கு இசை, நடனம், நீச்சல் மற்றும் உடற்பயிற்சி போன்ற பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
‘ரொசாட்டம்’ எனப்படும் ரஷிய அரசின் அணு ஆற்றல் கழகத்தின் உலகளாவிய குழந்தைகள் கலைத்திட்டமாக ‘நியூக்ளியர் கிட்ஸ்’ இயங்கி வருகிறது. இந்த அமைப்பு வெளிநாடுகளில் உள்ள அணுமின் நிலைய பணியாளர்களின் குழந்தைகளை ஒருங்கிணைத்து ரஷியாவில் பன்னாட்டு இசை விழாவை நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு கூடங்குளம் அணுமின் நிலைய மைய பள்ளியில் படிக்கும், பணியாளர்களின் குழந்தைகளான ஆர்.பூரணபிரகாஷ், ஆர்.சூரியக்குமார், கே.ஹரிஹரன் ஆகிய 3 மாணவர்கள் தகுதி போட்டிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பள்ளி நிர்வாகி ஆர்.வேலுப்பிள்ளை தலைமையில் 3 மாணவர்களும் இன்று (வியாழக்கிழமை) ரஷியா புறப்படுகின்றனர்.
ரஷியாவில் இம்மாணவர்களுக்கு இசை, நடனம், நீச்சல் மற்றும் உடற்பயிற்சியுடன், பிறநாட்டு மாணவர்களுடன் பழகுதல் போன்ற பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. ஆகஸ்டு முதல் வாரத்தில் இசை-நடன நிகழ்ச்சி நடைபெறும். ரஷியாவில் உள்ள அணுமின் நிலையங்களை சுற்றிப்பார்க்கவும் மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்.
2010 முதல் 2012-ம் ஆண்டு வரை 3 முறை இந்த பள்ளி மாணவர்கள் ரஷியா சென்று வந்துள்ளனர். இது 4-வது முறையாகும்.
ரஷியா செல்லும் மாணவர்கள் கூறுகையில், ‘உலகளாவிய நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு நாங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பயணம் பிறநாட்டு மாணவர்களை சந்திக்கவும், பழகவும் வாய்ப்பாக அமையும். உலகின் பண்பாடு, கலைகளை கற்றுக்கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக எங்களுக்கு அமைந்துள்ளது’ என்றனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *