ஈரோட்டில் குட்டிநீர் திட்டப் பணிகள் துவக்கம்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, 21வது வார்டு, திருவிக நகர் புதிய ஆசிரியர் காலனி பகுதியில், எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு நிதியிலிருந்து, ரூ.4 லட்சம் மதிப்பில், ஆழ்குழாய் கிணறு அமைத்து, ‘சின்டெக்ஸ் டேங்க்’ மூலம், பொதுமக்களுக்கு, குடிநீர் வழங்கும் பணி மற்றும் அதே போல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியான வைராபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு நிதியிலிருந்து ரூ.4 லட்சம் மதிப்பில், ஆழ்குழாய் கிணறு அமைத்து, ‘சின்டெக்ஸ் டேங்க்’ மூலம் குடிநீர் வழங்கும் பணி என, மொத்தம் ரூ.8 லட்சம் மதிப்பிலான, குடிநீர் இணைப்புகளை, எம்எல்ஏக்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந் நிகழ்ச்சியில், பகுதிச் செயலாளர்கள் முருகசேகர், ஜெகதீஷ், கேசவமூர்த்தி, கோவிந்தராசர், முன்னாள் நகர செயலாளர் மார்க்கெட் ராஜா, பேரவை துணைச்செயலாளர் சோழா லோகநாதன், இணைச்செயலாளர் பாவை அருணாச்சலம், மகளிர் அணி துணைச்செயலாளர் பாப்பாத்தி மணி, முன்னாள் கவுன்சிலர்கள் இளங்கோ, தங்கவேலு, கோபால், 21வது வட்டச் செயலாளர் மான் செல்வராஜ், நகர பிரதிநிதி ஆஜீம், கட்டிடத் தொழிலாளர் சங்கத்தலைவர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.