கிருஷ்ணகிரியில் இலவச எரிவாயு அடுப்பு விநியோகம்
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில், மத்திய அரசு சார்பில் ஏழை எளிய குடும்ப பெண்களின் பணி சுமையை போக்க, விலையில்லா இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், எம்பி அசோக்குமார் தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு விலையில்லா எரிவாயு சிலிண்டர் மற்றும் அடுப்புகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது :-–
தமிழகத்தில், பாரத பிரமரின் தூய்மை இந்தியா திட்டம், முத்ரா கடன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சுமார் 14 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, மத்திய அரசு, ரூபாய் இரண்டு கோடியே இருபத்து நான்கு லட்சம் வழங்கியுள்ளதாகவும், இதனை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று பேசினார்.
நிகழ்ச்சியில், இந்தியன் ஆயில் நிறுவன கோவை மண்டல உதவி பொது மேலாளர் யோகராணி, ஏரியா மேலாளர் சனில் குமார், துணை மேலாளர் கிட்டுமோல், அக்ரோ தலைவர் கிருஷ்ணன், முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் வாசுதேவன், அண்ணாதுரை, நகர கூட்டுறற வங்கி தலைவர் திருநாவுக்கரசு, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் விக்ரம்குமார், பேரூராட்சி உறுப்பினர் அபிராமி மதன கோபால் மற்றும் மாவட்டத்தில் உள்ள எரிவாயு வினியோகஸ்தர்கள் சதீஷ் குமார், ராமமூர்த்தி மற்றும் மாவட்டத்தில் உள்ள ஐஓசி விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.