ஏர்டெல் வாடிக்கையாளருக்கு ‘ஆடி’ கார் பரிசு

ஏர்டெல் நடத்தும், தினசரி வினாடி வினா போட்டியில், வெற்றி பெற்றவருக்கு, புதிய ஆடி ஏ3 கார் பரிசாக வழங்கப்பட்டது.
இந்தியாவில் 215 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ள பாரதி ஏர்டெல், இந்தியாவில் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகும். ஒரே நாட்டில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வகையில், உலக அளவில் 3 வது இடத்திலும் 300 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் உலகின் 4 வது பெரிய நிறுவனமாகவும் உள்ளது. மேலும், 20 நாடுகளில் தொலைத்தொடர்புச் சேவை வழங்கும் ஓர் இந்தியத் தனியார் நிறுவனம் என்ற பெருமையையும், ஏர்டெல் நிறுவனம் பெற்று உள்ளது.
முன்னதாக, ஏர்டெல் நிறுவனம் 30ஜிபி டேட்டா போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு 3 மாதம் இலவசம் என்று அதிரடி ஆபரை ஏப்ரல் மாதத்தில் அறிவித்தது. இந்நிலையில் தன்னுடைய ஆபர் திட்டத்தை மேலும் மூன்று மாத காலம் நீட்டிப்பு செய்து ஏர்டெல் அறிவித்தது.
இதையடுத்து, ஜூலை 1 ந் தேதி முதல் அடுத்த மூன்று மாதங்களுக்கு, 30 ஜிபி இலவசமாகவே வழங்கப்படும் என அறிவித்தது.
புத்தம் புதிய ஆடி கார் பரிசு
நாடு முழுவதும் 4ஜி கைபேசிகளின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், கவர்ச்சிகரமான சலுகைகளை, ஏர்டெல் நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில், ஏர்டெல்லின் பிளேயர் ஜோன் போட்டியை அறிவித்தது.
ஏர்டெல்லின் பிளேயர் ஜோன் போட்டியில், வெற்றிவாகை சூடியவரான கோவையை சேர்ந்த சந்திர மௌலி, பார்தி ஏர்டெல்-லின் தமிழ்நாடு பிரிவின், மொபிலிட்டி துறையின் சந்தையாக்கல் தலைமை அலுவலரான ரித்தேஷ் சங்வியிடமிருந்து, புத்தம் புதிய ஆடி ஏ3 காரை, பரிசாக பெற்றார்.
நிகழ்ச்சியில், ஏர்டெல்லி-ன் பிளேயர் ஜோன் போட்டியில், வென்றவரான கோவையை சேர்ந்த சந்திர மௌலிக்கு ஒரு புத்தம் புதிய ஆடி ஏ3 கார் பரிசாக வழங்கப்பட்டது.
வினாடி வினா
ஏர்டெல் பிளேயர் ஜோன் கான்டெஸ்ட் பேக், ஆர்வமூட்டுகின்ற வினாடி வினா போட்டிகளில் பங்கேற்க, ஏர்டெல்-லின் போஸ்ட்பெய்டு மற்றும் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் ஆகிய இரு வகையினத்தவர்களுக்கும், மிகச்சிறப்பான பரிசுகளை வெல்லும் அற்புதமான வாய்ப்பை வழங்குகிறது.
கார்கள், பைக்குகள், தங்க மற்றும் வைர நகைகள், சுற்றுலா செல்ல விடுமுறை வவுச்சர்கள் மற்றும் மொபைலுக்கான டாக்-டைம் ரீசார்ஜ்கள் ஆகிய வியத்தகு பரிசுகளை வெல்வதற்கான வாய்ப்பு இப்போட்டியில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.
வெறும் ரூ.5 என்ற கட்டணத்துக்கு ஏர்டெல்-ன் எந்தவொரு சந்தாதாரரும், தினசரி நடைபெறுகின்ற வினாடி வினா (க்விஸ்) போட்டியில் 55000 (கட்டணமில்லா அழைப்பு) என்ற எண்ணுக்கு டயல் செய்வதன் மூலம் கலந்துகொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *