சாத்தூர் அருகே தரைமட்ட நீர்தேக்கத் தொட்டி: சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. திறந்தார்
சாத்தூர் அருகே உப்புபட்டியில் கட்டப்பட்ட தரைமட்ட நீர்தேக்க தொட்டியை சாத்தூர் எம்எல்ஏ எதிர்கோட்டை சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
சாத்தூர் அருகே உப்புபட்டியில் தரைமட்ட நீர்தேக்க தொட்டி அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சாத்தூர் எம்எல்ஏ எதிர்கோட்டை சுப்பிரமணியனிடம் வலியுறுத்தி வந்தனர். கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று உப்புபட்டியில் சிவகாசி-ஆலங்குளம் செல்லும் சாலையில் தரைமட்ட நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த தரைமட்ட நீர்தேக்க தொட்டியை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு சாத்தூர் எம்எல்ஏ எதிர்கோட்டை சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ராமராஜ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் சங்கர்ராஜ், வெம்பக்கோட்டை முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கவிதா, சாத்தூர் இளைஞரணி ஒன்றிய செயலாளர் குருசாமி, வெம்பக்கோட்டை முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், தாயில்பட்டி ஊராட்சி செயலாளர் புதுராஜ், தாயில்பட்டி கூட்டுரவு வங்கி தலைவர் கணேசன், அம்மா பேரவை காமராஜ், அழகர்சாமி உட்பட கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.