சன்பீஸ்ட் யிப்பீ! இலவச ஷாப்பிங் திருவிழா

இந்தியாவின் முன்னணி இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் தயாரிப்பான சன்பீஸ்ட் யிப்பீ! தனது வாடிக்கையாளர்களை மேலும் ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் விதமாக, இப்போது சன்பீஸ்ட் யிப்பீ! இலவச ஷாப்பிங் கொண்டாட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த கொண்டாட்டத்தைப் பொறுத்தவரை, அனைத்து வாடிக்கையாளர்களும் வெற்றியாளர்கள் தான். காரணம், ஒவ்வொரு பாக்கெட்டிலும், அழகிய 3டி ஸ்டிக்கர் அளிக்கப்படும். சில பாக்கெட்டுகளில் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில், மொபைல் போன்கள் & செல்பீ ஸ்டிக்குகள் போன்ற பரிசுகளை வெல்வதற்கான வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

இது மட்டுமின்றி, 50 அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்கள், பிக்பஸார் விற்பனைக் கடைகளுக்குச் சென்று, 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை முற்றிலும் இலவசமாக ஷாப்பிங் செய்து பொருட்களை வீட்டிற்கு அள்ளிச் செல்லலாம்.

ரூ.1 லட்சத்துக்கு இலவச ஷாப்பிங்

இந்த 50 அதிர்ஷ்டசாலிகளின் பட்டியலில், கோவையைச் சேர்ந்த சோனியா மற்றும் கிளாட்சன் ஆகியோர் இணைந்துள்ளனர். இவர், கோவையில் உள்ள சண்முகம் சாலைக்கு அருகில் இயங்கும், பிக்பஸாரில், ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை இலசமாக ஷாப்பிங் செய்து வீட்டுக்கு எடுத்துச் செல்லும் அசத்தலான வாய்ப்பை பெற்றுள்ளார்.

இந்த இலவச ஷாப்பிங் கொண்டாட்டத்தின் அதிர்ஷ்டசாலியான சோனியா, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் போது, “நமக்கு பிடித்த பொருட்களை, செலவில்லாமல் ஷாப்பிங் செய்வது, மிக அற்புதமான அனுபவம்.

நான் சன்பீஸ்ட் யிப்பீ! தயாரிப்பின் நீண்ட நாள் வாடிக்கையாளர். எனக்கு பிடித்த இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் பிராண்டின் இலவச ஷாப்பிங் கொண்டாட்ட விளம்பரத்தில் வெற்றி பெற்றிருப்பது, மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த மகிழ்ச்சியான தருணத்தை, என் குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்வேன்.” என்றார்.

வாடிக்கையாளர்கள் உற்சாகம்

மற்றொரு வெற்றியாளர் கிளாட்சன் கூறும்போது,-

“1 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை இலவசமாக ஷாப்பிங் செய்வது, மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. சன்பீஸ்ட் யிப்பீ! நூடுல்ஸ் எனக்கு பிடித்த பட்டியலில் எப்போதும் இடம் பெறும். தனித்துவம் மிக்க இந்த போட்டியில் வெற்றி பெற்ற அதிர்ஷ்டசாலிகளில் நானும் இடம்பெற்றிருப்பதில் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த அனுபவத்தை என் குடும்பத்தாருடன் சேர்ந்து கொண்டாடி, வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாக பாதுகாப்பேன்” என்றார். இந்த சலுகை, யிப்பீ! மேஜிக் மசாலா பாக்கெட்களில் மட்டுமே கிடைக்கப்பெறும். 70 கிராம் பாக்கெட் ரூ.12க்கும், 140 கிராம் பாக்கெட் ரூ.23க்கும், 280 கிராம் பாக்கெட் ரூ.45க்கும் கிடைக்கிறது. இந்த சலுகை சீமாந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் கிடைக்கப்பெறும்.

இந்த சலுகை கொண்டாட்டம் குறித்து, ஐடிசியின் உணவுப் பிரிவின் டிவிஷனல் சீப் எக்ஸிகியூடிவ் ஹேமந்த் மாலிக் கூறும் போது ,“தரமான, கொண்டாடக்கூடிய சுவையை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சன்பீஸ்ட் யிப்பீ! செயல்பட்டு வருகிறது. இந்த ஷாப்பிங் கொண்டாட்டத்தில் வாடிக்கையாளர்களின் உற்சாகமான பங்கேற்பை எதிர்பார்க்கிறோம். ஏற்கனவே இந்த கொண்டாட்டத்தில் ஆச்சரியமூட்டும் அளவுக்கு மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். சன்பீஸ்ட் யிப்பீ! பிராண்ட் வளர்ச்சியை உறுதிசெய்யும் விதமாக, இந்த சலுகை மக்களுக்கு மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும், வெற்றிக் களிப்பையும் அளிக்கிறது.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *