விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலையை காங்கிரஸ் உருவாக்கியது – பிரதமர் மோடி
பெங்களூர்:
இந்த நிலையில் மோடி அடுத்த கட்டமாக கர்நாடகா மாநிலத்தில் இன்று பிரசாரம் செய்து பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
தும்கூரில் நடந்த கூட்டத்தில் மோடி பேசியது:-
தும்கூரில் நடந்த கூட்டத்தில் மோடி பேசியது:-
கர்நாடக மக்கள் மாற்றம் வேண்டும் என விரும்புகின்றனர். இதன் மூலம் பா.ஜ.க.வின் வெற்றி தெரிய வருகிறது. தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் வறுமை கோடு விவகாரத்தை பயன்படுத்துகிறது. இந்திரா காந்தி காலம் முதல் வறுமை குறித்து அக்கட்சி பேசி வருகிறது. ஆனால், ஏழை தாய் ஒருவரின் மகன் பிரதமரான பின்னர் , வறுமையை பற்றி பேசுவதை நிறுத்தி விட்டது. இனிமேலும் மக்களை முட்டாளாக்க முடியாது என அக்கட்சி புரிந்து கொண்டுள்ளது.
இந்திரா காலம் முதலே, தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஏழை மக்களை காங்கிரஸ் முட்டாளாக்கி வருகிறது. அது, பொய்கள் நிரம்பிய கட்சி. ஓட்டுக்காக தொடர்ச்சியாக பொய் சொல்கின்றனர். விவசாயிகள் பற்றியும், ஏழைகள் குறித்தும் அக்கட்சிக்கு கவலை கிடையாது.
காங்கிரஸ் மீது மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர் அதிக காலம் ஆட்சியில் விவசாயிகளுக்கு காங்கிரஸ் என்ன செய்தது நாங்கள் ஆட்சிக்கு வந்து 50 மாதங்கள் நிறைவு பெறவில்லை. ஆனால், கர்நாடகாவில் காங்கிரஸ் 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. விவசாயிகளுக்கு உழைக்க காங்கிரசுக்கு அதிக நேரம் இருந்தது. ஆனால், எதுவும் செய்யவில்லை.

ஐக்கிய ஜனதா தள கட்சியுடன் ஒப்பந்தம் உள்ளது என அக்கட்சியால் கூற முடியுமா? காங்கிரசும், மதசார்பற்ற ஜனதா தளமும் ரகசிய கூட்டணி வைத்துள்ளதை யாராலும் மறுக்க முடியாது. அக்கட்சியால், காங்கிரசை வீழ்த்த முடியாது. பா.ஜ.க.வுக்கு மட்டுமே அந்த திறமை உள்ளது.
இவ்வாறு மோடி பேசினார்.