தமிழிலும் தெலுங்கிலும் முதலில் ரீமேக் செய்ய போகிறேன். பின்னர் பல மொழிகளிலும் இந்த திரைபடத்தை ரீமேக் செய்யவும் திட்டமிட்டிருக்கிறேன்.” என்று பேசினார்
இயக்குனர் ஆகிறார் பிரபல ஒளிப்பதிவாளர் கபிர் லால்*
JULIA’S EYES எனும் ஸ்பானிஷ் படம் தமிழ் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது
JULIA’S EYES எனும் திகில் திரைபடம் ஸ்பானிஷ் மொழியில் 2010-ஆம் ஆண்டு வெளியானது. ஐரோப்பிய நாடுகள் முழுவதையும் கலக்கிய JULIA’S EYES திரைப்படம் இந்தியாவிலும் வெளியாக வெற்றிபெற்றது . ஸ்பெயின் நாட்டில் மட்டுமே சுமார் 20 மில்லியன் டாலர் வசூல் செய்து பல பாராட்டுகளையும் குவித்திருக்கிறது. ஜூலியா எனும் பெண் தன் சகோதரியின் சாவில் இருக்கும் மர்மத்தை கண்டறியும் முயற்சியில் தன் பார்வையை இழந்துவிடுகிறாள் அதன் பின் என்ன நடக்கிறது என்பதே இக்கதையின் கருவாக இருக்கிறது. இந்த திரைப்படத்தை Guillermo Del Toro தயாரித்தார். தற்போது இதை இந்தியாவில் இரண்டு மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளது .
தமிழிலும், தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படவுள்ள இத்திரைபடத்தை பிரபல ஒளிப்பதிவாளர் கபீர் லால் தானே தயாரித்து, இயக்கவும் உள்ளார்.
கபீர் லால் பரதேஸ், அப்னே, Welcome Back போன்ற இந்தி படங்களிலும், ஆதித்ய 369, பைரவ தீபம் அந்தரிவாடு, போன்ற தெலுங்கு திரைப்படங்களையும் மற்றும் தமிழில் மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்திலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார்.
100க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.
தற்போது போல நவீனத்துவம் ஏதும் இல்லாத காலத்திலேயே மைக்கேல் மதன காமராஜன் படத்தில் நான்கு கமல் ஹாஸங்களை ஒரே நேரத்தில் திரையில் காண்பித்தவர் இந்த கபீர் லால். இத்திரைபடத்தை பற்றி கபீர் லால் பேசும்போது, “மிகவும் சுவாரசியமான திரைக்கதை கொண்டது இத்திரைபடம். இதை இந்தியாவிற்கும் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தோடு தான் தமிழிலும் தெலுங்கிலும் முதலில் ரீமேக் செய்ய போகிறேன். பின்னர் பல மொழிகளிலும் இந்த திரைபடத்தை ரீமேக் செய்யவும் திட்டமிட்டிருக்கிறேன்.” என்று பேசினார். விரைவில் Julia’s Eyes திரைப்படத்தின் ரீமேக் வேலைகள் தமிழிலும் தெலுங்கிலும் ஆரம்பித்துவிடும் எனவும் தெரிவித்தார்.