பெட்ரோல் பங்கு ஊழியரிடம் பணத்தை கொள்ளையடித்த 3பேரை போலீசார் கைது

அரவக்குறிச்சி பெட்ரோல் பங்கு ஊழியரிடம் பணத்தை கொள்ளையடித்த 3பேரை போலீசார் கைது செய்து விசாரணை.

அரவக்குறிச்சி அருகே பெட்ரோல் பங் கேசியரிடம் ரூ 3.68 லட்சம் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த மலைக்கோவிலூர் அருகே சேலம் to மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துக்காக காத்திருந்த பெட்ரோல் பங்க் கேசியர் சுப்பிரமணியிடம் அந்த வழியாக இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் ரூபாய் 3.68 லட்சத்தை வழிப்பறி செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இது தொடர்பாக அரவக்குறிச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதில் கரூர் பசுபதிபாளையத்தை சேர்ந்த சூர்யா (22) மூலப்பட்டியை சேர்ந்த கவியரசன் (23) காட்டுப்புத்துரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (21) ஆகிய 3 பேர்களை அரவக்குறிச்சி போலீசார் கைது செய்து ரூ 2லட்சத்து 45ஆயிரம் பறிமுதல் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *