ஜெம் மருத்துவ மனையில் வெள்ளி விழா

ஜெம் மருத்துவ மனையில் குடலிறக்க வெள்ளி விழா நிகழ்ச்சி

கோவை இராமநாதபுரத்தில் குடலிறக்க சிகிச்சையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது ஜெம் மருத்துவமனை.
இம்மருத்துவமனை தற்போது இந்த சிகிச்சையில் 25 வருட வெற்றிப்பயணம் வெள்ளிவிழாவாக கொண்டாடப்பட்டுள்ளது.
இதன் நிகழ்வாக மே மாதம் 13ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற்றது.
இதில் குடலிறக்கம் பற்றிய கண்காட்சி மற்றும் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் இடம் பெற்றிருந்தது. இம்மருத்துவமுகாம் மூலம் 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்த முகாமின் நோக்கம் பொதுமக்களுக்கு ஹெர்னியா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதே ஆகும். டாக்டர் பழனிவேலு 1993 ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன் முதலாக கோவை யில் இந்த ஹெர்னியா சிகிச்சை யை ஆரம்பித்தார். கண்காட்சியில் குடலிறக்கத்தின் பல்வேறு வகைகள் அதற்கான அறிகுறிகள் அறுவை சிகிச்சை முறைகள் பற்றிய படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக இந்த சிகிச்சை யானது 3d தொழில் நுட்ப முறையில் செய்யப்படும்.
இந்த வெள்ளி விழா கண்காட்சி யில் தமிழக உள்ளாட்சித்துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று ஹெர்னியா பற்றிய விழிப்புணர்வு புத்தகத்தை வெளியிட்டு தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் வி.சி. ஆறுக்குட்டி, வடக்கு சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார், வேதநாயகம் மருத்துவமனை நிறுவனர் எஸ்.வி.கந்தசாமி கவுரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
முடிவில் ஜெம் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் சி.பழனிவேலு வரவேற்புரை நிகழ்த்தினார். கோவை நிருபர் ராஜ்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *