நிபா வைரஸ் காய்ச்சல் மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், இக்காய்ச்சல் பரவுவதை தடுக்க கேரள மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள கோவை
கேரளா மாநிலத்தில் நிபா காய்ச்சல் அச்சுறுத்தி வரும் நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிப்பு ஏற்படுபவர்களுக்கான சிகிச்சையளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், இக்காய்ச்சல் பரவுவதை தடுக்க கேரள மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள கோவை, நீலகிரி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனையில் நிபா காய்ச்சல் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. பத்து படுக்கைகள் கொண்ட இந்த தனிமை வார்ட்டில் நிபா காய்ச்சல் அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒருவர் கூட இக்காய்ச்சலினால் பாதிக்கப்படவில்லை என்றாலும், கோவையில் இருந்து கேரளாவிற்கு அதிகளவிலான மக்கள் சென்று வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிவார்டு அமைக்கப்பட்டுள்ளதாக கோவை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்வர் அசோகன் தெரிவித்தார். மேலும் நிபா காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும், மருத்துவர்கள், செவிலியர்கள் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து எச்சரிக்கையாக நோயாளிகளை கையாளுமாறு அறிவுறுத்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக நாடுமாறு அறிவுறுத்திய மருத்துவர் அசோகன், இக்காய்ச்சல் எளிதில் பரவாது என்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும், வவ்வால்கள் மூலமாக இக்காய்ச்சல் பரவும் என்பதால் பறவைகள் கடித்த பழங்களை உட்கொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்தார்.
பேட்டி : அசோகன் – முதல்வர், கோவை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி