வேடசந்தூரில் நடந்த ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் பொதுக்குழு கூட்டம்

வேடசந்தூர், மே.23& புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு ஏற்கனவே
நடைமுறையில் இருந்து வந்த திட்டத்தையே தொடர்ந்து செயல்படுத்திட
மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். வேடசந்தூரில் நடந்த
ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் பொதுக்குழு கூட்டம் வலியுறுத்தல்
ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் பொதுக்குழு கூட்டம் மற்றும் 29&ம் ஆண்டு
விழா வேடசந்தூரில் நடந்தது.
கூட்டத்திற்கு தலைவர் சுவாமிநாதன் தலைமை ஏற்றுப்பேசினார். மாவட்ட
தலைவர் பொன்னையா முன்னிலை வகித்துப்பேசினார். துணைத்தலைவர்
தங்கவேலு வரவேற்றுப்பேசினார். செயலாளர் மருதையப்பன் ஆண்டு
அறிக்கை வாசித்தார். பொருளாளர் வரதராஜ் வரவு செலவு அறிக்கை
வாசித்தார். துணைத்தலைவர் பழனிச்சாமி இரங்கல் தீர்மானம் வாசித்தார்.
இந்நிகழ்ச்சியில் வேடசந்தூர் தாசில்தார் சுரேஷ்கண்ணன், உதவி கருவூல
அலுவலர் மகேஷ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றுப்பேசினார்கள்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு ஏற்கனவே நடைமுறையில் இருந்து
வந்த திட்டத்தையே தொடர்ந்து செயல்படுத்திட மத்திய, மாநில அரசுகள்
நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மத்திய அரசு 6&வது ஊதியக் குழுவின் சிபாரிசின் படி ஓய்வுபெறுவோருக்கு 20
வருடம் பணிபுரிந்தாலே கடைசியாக வாங்கிய ஊதியத்தில் 50 சதவீதம் கடந்த
1.9.2018 க்கு பின் ஓய்வுபெற்றோர்களுக்கு வழங்கி வருகிறது. அதே போல
தமிழக அரசும் வழங்கிடவேண்டும்.
ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரிந்த ஊராட்சி பணியாளர்களுக்கு ஊரக
வளர்ச்சித்துறையின் மூலம் ஓய்வூதிம் வழங்குவதை மாற்றி கருவூல மூலம்
வழங்கிட தமிழக அரசு ஆணை வழங்கவேண்டும்.
ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மருத்த்துவ படியாக தமிழஅரசு ரூ 300
வழங்குகிறது. ஆனால் மத்திய அரசு ரூ 1000 வழங்குகிறது அதே போல தமிழக
அரசும் வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *