கிணற்றில் தவறி விழுந்த ஊனமுற்ற இளம்பெண்

வேடசந்தூர் அருகே தணணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்த ஊனமுற்ற
இளம்பெண்ணை தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சத்திரப்பட்டியைச் சேர்ந்த
ஜோதி இவரது மனைவி மாரியம்மாள் இருவரும் இதே பகுதியில் உள்ள
தனியார் நூட்புமில்லில் பணியாற்றி வருகிறார்கள். இன்று (10.6.2018) காலை
வழக்கம்போல மில்லுக்கு சென்றுவிட்டனர்.
இவரது மகள் ரேவதி(21) கால்கள் ஊனமுற்ற நிலையில் உள்ளதால் இன்னும்
திருமணம் ஆகாமல் வீட்டில் இருந்துள்ளார். ஊர் அருகே உள்ள தனது
தோட்டத்திற்கு ஒத்தையடி பாதையில் தவழ்ந்து தவழ்ந்து சென்ற ரேவதி
தோட்டத்தில் உள்ள பாழும் கிணற்றின் அருகே அமர்ந்து இருந்தவர்
எதிபாராதவிதமாக 20 அடி ஆழ தண்ணீர் மற்றும் படி இல்லாத பாழும்
கிணற்றில் தவறி விழுந்துள்ளார். உடலில் சிராய்ப்பு காயங்களுடன் அய்யோ…
அம்மா… காப்பாற்றுங்கள்… என்று அலறல் சக்தம் கேட்டு ஊருக்குள்
இருந்தவர்கள் ஓடிவந்து பாத்தபோது ரேவதி கிணற்றில்
தவித்துக்கொண்டிருந்தார்.
உடனடியாக பொதுமக்கள் வேடசந்தூர் தீயணைப்பு துறைக்கு தகவல்
கொடுத்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் கண்ணன் தலைமையிலான
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் நீண்ட
நேரம் போராடி கயிறு கட்டி ஊனமுற்ற பெண் ரேவதியை உயிருடன் மீட்டனர்.
பின்னர் அவரை 108 ஆம்புலன்சு மூலம் சிகிச்சைகாக திண்டுக்கல் அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
வே.லட்சுமிபதி நிருபர் வேடசந்தூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *