காகிதப் பைகள், துணிப்பைகள், பாக்குமர பொருட்கள் மற்றும் பனை ஓலைப்பொருட்களும் விற்பனை

 

 

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் நடத்தும் நவராத்திரி, ஆயூத பூஜை, மற்றும் தீபாவளியை முன்னிட்டு , நவராத்திரி கொலு பொம்மைகள், அத்தியவசியமான பொருட்கள், ஜவுளிரகங்கள் என் பல்வேறு பொருட்கள் இக்கண்காட்சியல் காட்சி படுத்தப்பட்டுள்ளன. மேலும்மகளிர் உயிர்ம வேளாண் சந்தை
சென்னை அன்னை தெரசா மகளிர் வளாகம், வள்ளுவர் கோட்டம்
04.10.2019 முதல் 07.10.2019 வரை,
தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மகளிரின் வளர்ச்சிக்காக பல்வேறு
நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதிலுமுள்ள
மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்துதல் பணியினை
மாவட்டங்களில் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கங்களும், மாநில அளவில் தமிழ்நாடு மாநில
வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் மேற்கண்ட மாவட்ட சங்கங்களுடன் ஒருங்கிணைந்து சிறப்புடன்
செயல்படுத்தி வருகிறது.
தற்போது இயற்கை வேளாண் பொருட்களுக்கான தேவையை பூர்த்தி செய்தல் மற்றும்
அப்பொருட்களை உற்பத்தி செய்வோருக்கு நியாயமான விலை கிடைக்கச் செய்திடும் நோக்கில்
தமிழ்நாடு மாநில வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் சென்னை அன்னை தெரசா மகளிர் வளாகத்தில்
மாதந்தோறும் முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மகளிர் உயிர்ம வேளாண் சந்தை என்ற
பெயரில் வேளாண் மகளிரின் விளை பொருட்களுக்கான விற்பனை கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் இம்மாதத்திற்கான மகளிர் உயிர்ம வேளாண் சந்தை 04.10.2019 முதல்
07.09.2019 வரை நான்கு நாட்கள் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகிலுள்ள
அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

இவ்விற்பனைக் கண்காட்சியில் மகளிர்
தங்களது வேளாண் பொருட்களான கீரை வகைகள், காய்கறிகள், பழங்கள், அரிசி வகைகள், செடிகள்,
விதைகள், மரசெக்கு எண்ணெய், சிறுதானியங்கள், மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும்
நெகிழிக்கு மாற்று பொருட்களான காகிதப் பைகள், துணிப்பைகள், பாக்குமர பொருட்கள் மற்றும் பனை
ஓலைப்பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நல்ல வாய்ப்பினை பொது மக்கள் பயன் பெறுமாறு ள்ளப்படுகிறது.

தொழில்நுட்பக் கல்லூரி 9வது பட்டமளிப்பு விழா

 

பி. எஸ். அப்துர் ரகுமான் கிரசண்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி 9வது பட்டமளிப்பு விழா

சென்னை, அக்டோபர் 2019 : பி. எஸ். அப்துர் ரகுமான் கிரசண்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் 9வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் 5ந் தேதி அக்டோபர் 2019 நடைபெற்றது. இதில் முனைவர் பட்டங்கள் உள்பட 1396 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் அளிக்கப்பட்டன. அதில் 379 முதுநிலை பட்டங்களும், 996 இளநிலை பட்டங்களும் அடங்கும். பட்டப்படிப்புகளை முடித்த மாணவர்களுக்கு இந்நாளில் நடைபெற பட்டமளிப்பு விழாவில், மாண்புமிகு மத்திய சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான அமைச்சர் திரு. முக்தர் அப்பாஸ் நக்வி பட்டங்களை வழங்கினார்.

இந்த விழாவில் இந்தியாவுக்கான கானா நாட்டு தூதரக அதிகாரி திரு மைக்கல் ஆரோன் நி நோர்டி க்யே, பி. எஸ். அப்துர் ரகுமான் கிரசண்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் வேந்தர் திரு அப்துல் குவாதிர் ஏ ரகுமான் புகாரி, துணை வேந்தர் டன் ஸ்ரீ டத்தோ திரு பேராசிரியர் ஷகோல் ஹமித் பின் அபு பக்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சர் மாண்புமிகு திரு. முக்தர் அப்பாஸ் நக்வி, பட்டம் பெற்ற மாணவர்கள் அனைவரையும் வாழ்த்தி பேசினார். மேலும் அவர் பேசுகையில், இந்தியா மிகப்பெரிய அளவுக்கு மனித வள ஆற்றலை கொண்டிருக்கிறது 25 வயதுக்கு உட்பட்ட வலிமையான திறன் படைத்த 500 மில்லியன் இளைஞர்களை கொண்டிருக்கிறோம். இது உலக நாடுகளிலேயே மிக பெரியதாகும். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உலகில் இந்திய இளைஞர்களின் சாதனைகள் நம்மை பெருமை கொள்ளத்தக்க இடத்தில் வைத்துள்ளனர். இந்திய கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகவே அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் எப்போதும் திகழ்கின்றன. பல்வேறு துறைகளில் மிகப்பெரிய அறிவியல் விஞ்ஞானிகளை இந்தியா உருவாக்கி இருக்கிறது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உலகில் இந்தியா மிகப்பெரிய வரலாற்றை கொண்டிருக்கிறது. சுதந்திர காலத்துக்கு பிறகு இந்தியா வெற்றிகரமான ஏராளமான விஞ்ஞானிகளை உருவாக்கி இருக்கிறது. பௌதீகம், அணு அறிவியல், விண்வெளி, கணிதம் என பல்வேறு துறைகளில் சிறப்பு வாய்ந்த விஞ்ஞானிகள் தங்களது பங்களிப்பை வழங்கினர். பல புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள் வழியாக உங்களில் ஒருவர் கூட பழைய வரலாறுகளை திருத்தி எழுதக்கூடும். என்பதில் நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். மிகச் சிறந்த இந்திய விஞ்ஞானிகள் உங்களுக்கு ஊக்க சக்தியாகவும், உங்களின் ஆக்க சக்தியாகவும் இருக்கட்டும். அவர்கள் உங்களது வாழ்வின் வழிகாட்டியாக திகழும் என்று பேசினார்.

பி. எஸ். அப்துர் ரகுமான் கிரசண்ட் அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரியின் துணை வேந்தர் டாக்டர் சாகுல் ஹமீத் பின் அபு பக்கர் கல்லூரியின் சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். அவர் பேசுகையில், எங்களது கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆகச் சிறந்த கற்றல் மற்றும் கற்பித்தல் திறன்கள் கிடைக்கும் அளவுக்கு வசதிகளை ஏற்படுத்தித் தருகிறோம். கல்லூரியில் வழங்கப்படும் பாடத் திட்டங்கள் தொழில் ஆலைகளுக்கு தேவையாக இருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கல்லூரி படிப்பின் இறுதி காலத்திலேயே அவர்கள் நல்ல வேலை வாய்ப்புகளை பெறுவதற்கு அவர்கள் தங்களை தகவமைத்துக் கொள்ள முடியும். கடந்த 2018-19 ஆம் கல்வி ஆண்டில் 273 மாணவர்கள் கல்வியில் மிகச் சிறந்த மாணவர்களாக கண்டறியப்பட்டனர். அவர்களுக்கு ரூபாய் 8.6 லட்சம் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. திறம் வாய்ந்த மாணவர்கள் மட்டுமல்லாது. ஆசிரியர்களும் கண்டறியப்பட்டு அவர்களது சாதனைகளுக்காக ஊக்கப்படுத்த படுகின்றனர். எங்களது நிறுவனத்தை சேர்ந்த 70 ஆசிரியர்கள் அவர்களது கற்பித்தல் திறன் சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர் என்றார்.

இதன் பின், பட்டம் பெற்ற மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

திருச்சி லலிதா ஜூவல்லரியில் 13 கோடி நகைகள் கொள்ளை

திருச்சி லலிதா ஜூவல்லரியில் 13 கோடி நகைகள் கொள்ளை…

 

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஜோசப் கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் லலிதா ஜூவல்லரி ஷோரூம் உள்ளது. இன்று காலை 9 மணியளவில் முன்பக்க கதவை பணியாளர்கள் திறந்து பார்த்த போது அதன் கீழ் தளத்தில் உள்ள நகைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் பதற்றத்துடன் பார்த்த போது பின்புற சுவரில் ஓட்டை போடப்பட்டு அதில் இருந்து கடைக்குள் சென்ற கொள்ளையர்கள் அங்கிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிற்கான நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இந்த ஷோரூம் 3 தளங்களை கொண்டது. கீழ் தளத்தில் முற்றிலும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் மேல் தளத்திலும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு எப்படியும் 13 கோடி ரூபாயாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சமீபத்தில் திருச்சியில் இந்த அளவிற்கு நகைகள் கொள்ளை போனது இல்லை என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

Phoenix Gaming and Anime Expo Today

The much-anticipated September Fest by Phoenix MarketCity and Palladium, Chennai, put-together the country’s biggest gaming event, Phoenix Gaming and Anime Expo, in association with Arknemesis Gaming from the 27th to the 29th September, 2019. The mega event brought together ardent gamers from across the country for one of South Asia’s largest eSports competitions along with the biggest Cosplay competition to bring the unique flavour and experience of Asian popular culture to Chennai. The three-day festival united gamers from all around the country on a new battleground.

Spaces in and around the mall were transformed into a battleground for customers and walkers-by to experience gaming at its best. The expo was backed by some of the leading names in video games, technology and electronics including One Plus, being the main sponsor and Monster energy, being the associate sponsor. There were also board games set up for family members and friends of gamers who attended the event.
Ardent fans came forward to participate in games like FIFA 2020, CS:GO and PUBG on both mobile and PC to win the largest prize pools in India of INR 22 Lakhs. Around 1000 people registered to participate in the various tournaments.
The courtyard was filled with youngsters who were glued to their phones to win the PUBG tournament. There were cosplayers dressed like famous Gaming and Anime characters, walking around the mall. Hard core gamers were thrilled to see characters come alive at the three-day Phoenix Gaming and Anime Expo.
And that’s not all, for all the Anime followers there was a mind-blowing cosplay performance by the band, Daisuki Band who performed a lot of Japanese hit numbers. The love for Anime in Chennai was evident when the audience started singing along with the band. Other interesting events such as getting your name written in Japanese and workshop on drawing your own manga character thrilled the audience.
International judges such as Izumi Hatae, Konomi Nakayama, & Katsumasa Hamashita evaluated the cosplayer’s stage contest.

The winners for PUBG – PC were the 9 year olds. Navin won the FIFA 2020 gaming tournament while Anish was the runner-up, and Team ASTERIX came winners in PUPG mobile category and CS:GO was won by Orgless 5.
In the Cosplay competition, Ms. Trisha dressed as the character Angie Girl from the popular Japanese Anime Television series won in the Anime category and Mr. Sheik Sameer dressed up as Scorpion won in the gaming category.
Speaking on the occasion, Ms. Pooja Patti, Centre Director, Phoenix MarketCity and Palladium, said: ‘We are glad that we hosted the much anticipated September Fest 2019 at Phoenix MarketCity and Palladium. It gives us immense pleasure to have the country’s biggest gaming event and Anime convention, ‘PHOENIX GAMING AND ANIME EXPO’ in association with Arknemesis, to distinguish the growing zest for digital gaming and anime in the country.
The events were conceptualized to recognize the love for gaming and anime in Chennai and thereby providing a platform where avid gamers & players may get a taste of a gaming done on a national scale. We are happy that we could give people an unforgettable experience of a life time.’

________________________________________________________________________________________________________
About Phoenix MarketCity Chennai:
Phoenix MarketCity, a joint venture of Phoenix Mills & Crest Ventures is Chennai’s premium Shopping, Entertainment & Dining Destination. Spread over 1 million sq.ft, the mall is located in Velachery amidst the fast growing hubs of south Chennai. The mall hosts international and domestic retail brands, anchor stores of fashion, lifestyle, sports, electronics and home furnishing etc. The mall also offers the best fine dining restaurants giving shoppers a chance to indulge in global and local cuisine. Being one of the premium malls, Phoenix MarketCity is revolutionizing the retail & entertainment experience in the city. With state of the art facilities for shopping, entertainment, food, fitness and luxury brand shopping it is a true ‘Destination Mall’.

மின்சார வாரியத்தில் 20 ,000க்கு மேற்பட்ட களப்பணியாளர்கள் பதவி காலியாக உள்ளது

 

தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் , தலைவர் எஸ்.மணிகண்டன், பொது செயலாளர் ஏ. சேக்கிழார், பொருளாளர் ஜெ.லூர்து பாஸ்டின்ராஜ், செயல் தலைவர் கே. செல்வராஜு , அமைப்புச் செயலாளர் எஸ். இராமநாதன், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் 10 , 000க்கு மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வலியுறுத்தி சென்னை மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு , எலக்டிரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் தலைவர் எஸ்.மணிகண்டன் தலைமையில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் 27 . 09 . 2019 – ல் நடைபெற்றது .

மாநில பொருளாளர் ஜெ.லூர்து பாஸ்டின்ராஜ் , செயல் தலைவர் கே. செல்வராஜ் , அமைப்பு செயலாளர் எஸ். இராமநாதன் , பெடரேஷன் ஆலோசகர் ஆர். ஜெயராமன் மற்றும் மாநில நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 5000க்கு மேற்பட்ட கலந்து கொண்ட ஆர்ப்பாட்ட கூட்டத்தில் பொதுச் செயலாளர் ஏ.சேக்கிழார் கூறியதாவது . ‘ மின்சார வாரியத்தில் 20 ,000க்கு மேற்பட்ட களப்பணியாளர்கள் பதவி காலியாக உள்ளது . பத்தாண்டுகளுக்கு மேலாக நிரந்தரமின்றி பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய மின்சார வாரியம் மறுக்கிறது . 5 , 1 . 98 க்கு பிறகு ஒப்பந்த தொழிலாளர்கள் இல்லையென கட் ஆப் தேதி நிர்ணயிக்கிறார்கள் . இந்த தேதியை 10 . 08 . 2007 என மாற்ற வேண்டும் , 2008ம் ஆண்டு விடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பட்டியல் கேட்டபோது 480 நாட்கள் தொடர்ந்து வேலை செய்தவர்களை Labour Inspector உத்தரவு ஆதாரமாக எடுக்கப்பட்டது . தற்போது தொழிலாளர் நல ஆய்வாளர் ( Labour Inspector) உத்தரவு அளிக்கக் கூடாதென மின்சார வாரியம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறது . இரண்டு வருடங்கள் தொடர்ச்சியாக 480 நாட்கள் பணியாற்றியவர்களை நிரந்தரம் செய்திட வேண்டும் . ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செயதிட எஸ்.இ ( SE) தலைமையில் கமிட்டி அமைத்து அடையாளம் காண வேண்டும் . 2019ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு போனஸ் வழங்கிட வேண்டும் . 480 நாட்கள் தொடர்ந்து வேலை செய்தவர்களுக்கு பணி நியமனம் செய்ய தொழிலாளர் நல ஆய்வாளர் (Labour Inspector) மற்றும் உயர் நீதிமன்ற ( High Court ) உத்தரவுகளை மேல்முறையீடு செய்யாமல் அமல்படுத்தி வேலை வழங்க வேண்டும் .கே 2 ஒப்பந்தப்பந்த (K2 , Chit Agreement ) பணி செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மின்சார வாரியமே நேரடியாக ஊதியம் ரூ . 380 / – ( 22 . 2 . 2018 ஒப்பந்தப்படி ) வழங்கிட வேண்டும் . ஒப்பந்த தொழிலாளர் நிரந்தரம் குறித்து தொழிற்சங்கங்களோடு உடனடியாக பேச்சு வார்த்தை தொடங்கிட வேண்டும் . பேச்சு வார்த்தை நடத்திட மறுத்தாலோ , காலதாமதம் செய்தாலோ தொழிற் சங்க ரீதியான அடுத்த கட்ட நேரடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் .

டயர் எக்ஸ்போ, கேரேஜ் எக்ஸ்போ கண்காட்சி

வாகன தொழில்துறையை மேம்படுத்த
டயர் எக்ஸ்போ, கேரேஜ் எக்ஸ்போ கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது

* உலகம் முழுவதிலுமிருந்து 150 நிறுவனங்கள் அரங்கங்கள் அமைப்பு
* `மொபிலிட்டி துறையில் இந்தியாவின் எதிர்காலம்’ என்னும் தலைப்பில் கருத்தரங்கு
* 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்த்தக பார்வையாளர்கள் பங்கேற்கிறார்கள்

சென்னை, அக் 2019: டயர் மற்றும் வாகனத் தொழில் துறையில் இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியை தொகுத்து வழங்கும் `டயர் எக்ஸ்போ’, `கேரேஜ் எக்ஸ்போ’ மற்றும் `ஆட்டோமோடிவ் ஆப்டர் மார்க்கெட் இந்தியா 2019′ பதிப்பு துவக்க கண்காட்சி ஆகியவை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
.
வாகன தொழில்துறைக்கான ஆதாரம், உற்பத்தி, தொழில் பாதுகாப்பு மற்றும் சேவைகள் ஆய்வு, சான்றிதழ், லேபிளிங், உரிமம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உபகரணங்கள், சரக்கு தளவாடங்கள் கையாளுதல், பட்டறை திட்டமிடல் மற்றும் ஆலோசனை என்னும் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்களை ஒரே கூரையின் கீழ் இந்த கண்காட்சி கொண்டு வருகிறது. இந்த கண்காட்சியில் உலகம் முழுவதிலும் இருந்து 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அரங்குகள் அமைக்க உள்ளன. இதில், `மொபிலிட்டி துறையில் இந்தியாவின் எதிர்காலம்’ என்னும் தலைப்பில் பெருநிறுவனங்களை சேர்ந்த சிறந்த பேச்சாளர்கள் 20 பேர் பேச இருக்கிறார்கள். இந்த கண்காட்சியை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்த்தக பார்வையாளர்கள் பார்வையிட இருக்கிறார்கள்.

வாகனத் தொழில்துறையின் எதிர்காலத்தை மேம்படுத்துவதற்கான ஒரு தளத்தை வழங்கும் தொலைநோக்குடன் இந்த கண்காட்சியை சிங்எக்ஸ் இந்தியா நடத்துகிறது. 7வது டயர் எக்ஸ்போ இந்தியா 2019, 3வது கேரேஜ் எக்ஸ்போ 2019 மற்றும் `ஆட்டோமோடிவ் ஆப்டர் மார்க்கெட் இந்தியா 2019′ பதிப்பு துவக்கம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்த கண்காட்சியை சிங்எக்ஸ் இந்தியாவுடன் இணைந்து வாகன டயர் உற்பத்தியாளர் சங்கம், அகில இந்திய வாகன பட்டறைகள் சங்கம், இந்திய ரப்பர் உற்பத்தியாளர்கள் ஆராய்ச்சி சங்கம் மற்றும் வாகன திறன் மேம்பாட்டு கவுன்சில் ஆகியவை ஏற்பாடு செய்துள்ளன. லாபம் நிறைந்த இந்திய வாகன சந்தையில் முதலீடு செய்வதற்கும் நிறுவனங்களுக்கு சிறந்த வணிக தளத்தை ஏற்படுத்தி தருவதையும் இந்த கண்காட்சி முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. சமீபத்திய மற்றும் புதுமையான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை இக்கண்காட்சியில் காட்சிப்படுத்துவதன் மூலம் அது இந்திய வாகன துறைக்கு மிகவும் உதவியாக இருக்கும். மேலும், எதிர்கால தொழில்துறை போக்குகள், சந்தை நுண்ணறிவு மற்றும் இந்திய ஒழுங்குமுறை கட்டமைப்பு உள்ளிட்ட சவால்கள் குறித்தும் அறிந்து கொள்ள முடியும். இந்த கண்காட்சி வாகன தொழில்துறையின் அனைத்து பிரிவுகளில் இருந்தும் வாங்குபவர்கள், விற்பவர்கள், சேவை வழங்குனர்கள் மற்றும் கொள்முதல் நிபுணர்கள் ஆகியோரை ஒருங்கிணைக்கிறது. மேலும் அவற்றிற்கான புதுமையான தீர்வுகள் மற்றும் யோசனைகள், வணிக செயல்பாடுகள், சந்தை உத்திகள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்வதோடு, புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை ஏற்கனவே உள்ளவர்களுக்கும் புதிதாக வாங்குபவர்களுக்கும் வழங்குகிறது.

உலக அளவிலான வாகன தொழில் துறையில் சென்னை நகரம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் உலக அளவிலான வாகன தொழில் துறையின் மிகப்பெரிய மையமாக சென்னை இருக்கும். இந்த கண்காட்சியில் 150 அரங்கங்கள் அமைக்கப்பட உள்ளன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட கருத்தரங்குகள், 20க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் பங்கேற்கிறார்கள். இதில் வாகன பழுதுபார்த்தல் மற்றும் பராமரித்தல், உதிரிபாகங்கள் மற்றும் சந்தைக்கு பிறகான, டயர், பழைய டயர்கள் சீரமைப்பு, டயர் சர்வீஸ், டயர் மூலப்பொருள் மற்றும் துணை தொழில் நிறுவனங்களும் பங்கேற்க இருக்கிறார்கள்.

இதில் இந்தியாவில் டயர் தொழில்நுட்பம் – அதன் மீதான தற்போதைய, எதிர்கால பார்வை மற்றும் புதிய டயர், பழைய டயர்களை சீரமைத்தல், புதிய கார்களின் பாதுகாப்பு டிஜிடைசிங் வாகன தொழில் சந்தை, மின்னணு வணிக தளம் மற்றும் எலக்ட்ரிக் கார்களின் எதிர்காலம் ஆகியவை குறித்தும் பேசப்பட உள்ளன.

இந்த கண்காட்சி குறித்து சிங்எக்ஸ் இந்தியா நிறுவனத்தின் இந்தியாவுக்கான தலைவரும் பொது மேலாளருமான பல்தீப் சிங் கூறுகையில், டயர், கேரேஜ் மற்றும் வாகன சந்தைக்கு பிறகான தொழில்துறை ஆகியவற்றிற்கான எழுச்சி என்பது புதிய அரசாங்கத்தின் வாகன தொழில்துறை மீதான உந்துதலின் விளைவாகும். இந்த துறை வேலை வாய்ப்பு மற்றும் வருவாய் ஈட்டுவதில் குறிப்பிடத்தக்க பங்களிக்கும் தொழில் துறைகளில் ஒன்றாகும். வாகன தொழில் துறையின் சிறந்த இடமாக இந்தியாவை உருவாக்க, இந்த துறை வளர்ச்சிக்கும் சந்தைப்படுத்தலுக்கும் தேவையான முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது என்று தெரிவித்தார்.

இந்த கண்காட்சியில் தொழில்நுட்ப பட்டறைகள், தொழில்நுட்ப கருத்தரங்குகள், இட வணிக பொருத்தம் மற்றும் போல்ட் விருதுகள் வழங்கும் விழா ஆகியவை இடம் பெற்றுள்ளன. வருடாந்திர `போல்ட் ஆட்டோமோடிவ் தொழில்துறை விருதுகள்’ இந்திய வாகன தொழில் தனி நபர்களின் கடின உழைப்பு, சிறப்பு மற்றும் இந்தியா முழுவதிலும் உள்ள வாகன துறை உற்பத்தியாளர்கள், வர்த்தக நிறுவனங்கள், ஊடகம் மற்றும் எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் உற்பத்தியாளர்கள் ஆகியோரை அங்கீகரித்து வழங்கப்படுகிறது.

நிருபர் மோகன்

To solve the next murder, read between the lines! SonyLIV

Startled at the sudden disappearance of his wife Geetha, Viktor an astute cop gets cracking on the case. But as he probes deeper, a series of gruesome murders put the entire city in panic leaving him in a predicament. What will he do next? SonyLIV, India’s first premium video on demand (VOD) platform along with Applause Entertainment, a venture of the Aditya Birla Group announced the launch of their first Tamil original ‘Iru Dhuruvam’ premiering today on SonyLIV. Present at the press conference were Uday Sodhi, Business Head- Digital, Sony Pictures Networks India, Amogh Dusad, Head Content Partnerships, New Initiatives, Digital, Sony Pictures Networks India and Sameer Nair, CEO, Applause Entertainment along with the ensemble cast of Iru Dhuruvam.

 

Produced for Applause Entertainment by Pramod Cheruvalath’s Sign of Life Productions, the show which means ‘bipolar’ is directed and written by M Kumaran. The show begins with a series of horrific murders that put the city in a state of shock and chaos overnight. It turns out to be the work of a serial killer who quotes couplets from the “Thirukkural” (a classic Tamil text) as clues, leaving everyone at sixes and sevens. Inspector David Viktor, a hawk-eyed cop is assigned to hunt down the killer. But what happens when the hunter himself becomes a prey? As Viktor gets embroiled deeper into this strange turn of events, little does he know what lies ahead for him. While investigating the brutal murders, he himself is under the scanner for his wife’s mysterious disappearance. Is there a connection between these two events? Will this investigation lead him to his wife? The gripping series will see inspector Viktor encountering all details that will put him at crossroads of his professional and personal life.

Running over 9 episodes, Iru Dhuruvam features actors Nandha Durairaj – one of the first popular Tamil actors venturing into the OTT space post a hiatus, Abhirami Iyer – former Miss Tamil Nadu who is a popular face in the Tamil web space, the young YouTube sensation Abdool and popular theatre and film artist Sebastin, Anisha in lead roles of this nail-biting web series, that is sure to leave you on the edge of your seat and hooked on till the end.

Iru Dhuruvam is SonyLIV’s second content offering for its Tamil audience. Post its foray in the market in May 2019, the platform recently launched the Tamil version of its marquee show Crime Patrol with actor Ganesh Venkatraman that has got the audience talking. With tailormade stories like Iru Dhuruvam, Crime Patrol, My Marappu, Cookies and the upcoming Tamil original Aivar amongst others SonyLIV plans to pique the interest of its Tamil audience by engaging them with localised content rooted in Tamil traditions and sensibilities. Additionally, some of the most popular shows from SonyLIV include TVF originals such as Pitchers, Permanent Roommates, Tripling, along with over 40 iconic shows from Sony Pictures Networks India (SPN) content library like CID, Patiala Babes, Ladies Special, Aladdin, Beyhadh amongst others are available in Tamil to the audience for a customized entertainment experience.

Comments:
Uday Sodhi Business Head Digital Sony Pictures Networks India
“This partnership with Applause Entertainment blends our in-depth consumer understanding with their finesse in storytelling. With ‘Iru Dhuruvam’, we plan to scale up our Tamil offerings and be the go to OTT destination for the local audience. In a cluttered market like India, such collaborations are a leap towards an evolved ecosystem and will strengthen our promise of delivering cutting edge stories in the digital space. We look forward to a long term and fruitful association with Applause Entertainment as we collaborate to diversify our content offerings for the region.”

Sameer Nair, CEO, Applause Entertainment:
“India is a mass of niches and at Applause we want to build a diverse content repertoire to appeal to every audience palate. The launch of ‘Iru Dhuruvam’ is a step towards that direction. It marks our foray into regional content and is the first Tamil original partnership for Applause Entertainment and SonyLIV. We are excited to associate with SonyLIV and commence our journey of localized content through this show.”

About SonyLIV
SonyLIV is the first premium Video on demand (VOD) service by Sony Pictures Networks’ (SPN) providing multi-screen engagement for users on all devices. Launched in January 2013, it enables users to discover over 24 years of rich content from the network channels of Sony Pictures Networks India. It also provides a rich array of movies, strong line-up of events across all sports, shows, music, food and fitness.

With 109 million app downloads so far, SonyLIV is the first amongst its competition to provide original exclusive premium content. As a true pioneer in its space, SonyLIV launched India’s first-ever original show exclusively for the online platform. Streaming the biggest football tournament, the 2018 FIFA World Cup Russia on SonyLIV made it the most preferred online destination for football fans. SonyLIV also live streamed the India tour of South Africa, India tour of England and the India tour of Australia in 2018. It is the home for the biggest football leagues like UEFA Champions League, UEFA Europa League, La Liga and more.

SonyLIV has TVF content like Tripling Season 1 and 2. It also has American entertainment giant Lionsgate Play’s top-rated shows on the platform. SonyLIV has a host of award-winning English content with award winning shows like The Good Doctor, Mr. Mercedes, Damages, Counterpart and The Handmaid’s Tale.
www.sonyliv.com

துப்புரவு பணியாளர்களுக்கு விருது வழங்கும் விழா

 

 

வளசரவாக்கம் “தி ஹெல்தி கிட்ஸ்” மழலையர் பள்ளி முன்னெடுத்த சிறந்த துப்புரவு பணியாளர்களுக்கு விருது வழங்கும் விழா

சென்னபோரூரில் “தி ஹெல்தி கிட்ஸ்” மழலையர் பள்ளி வளசரவாக்கம் முன்னெடுத்த சிறந்த துப்புரவு பணியாளர்களுக்கு விருது வழங்கும் விழா
பள்ளியின் நிறுவனர் ம.செந்தில்உமையரசி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஊரகத் தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இணை நிறுவனர் உமையரசி வரவேற்றார். சுகாதாரத்துறை இணை ஆணையர் மதுசூதனன் ரெட்டி, மாநகராட்சி மண்டல அலுவலர் சசிகலா, பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ் இயக்குநர் கு.செல்வகுமார், விண்டேஜ் நர்சரி இயக்குநர் தாரக் ராம், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அறக்கட்டளை நிறுவனர் மு.ராஜவேலு, அறம் மக்கள் நலச்சங்கம் சென்னை மாவட்ட தலைவர் ராகுல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்தாண்டு சிறப்பாக பணிபுரிந்த 150 துப்புரவு பணியாளர்களுக்கு விருதினை ஊரக தொழில்த்துறை அமைச்சர் பி.பெஞ்சமின் வழங்கி பேசுகையில், துப்புரவு பணி என்பது சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துவதாக அமைகிறது. பணியாளர்களுக்கு அரசு வழங்கியுள்ள கையுறை மற்றும் பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்தி பாதுகாப்புடன் பணி செய்ய வேண்டும். பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்க முயற்சி மேற்கொள்ளப்படும். உங்கள் பணியால் தான் மக்கள் சுகாதாரமாக வாழ்கின்றனர் என்றார். காந்தியடிகள் பிறந்த தினத்தை போற்றும் வகையில்150 சுகாதார பணியாளர்களுக்கு நகைச்சுவை நடிகர் செந்தில், நல்லக்கீரை ஜெகன் ஆகியோர் மரக்கன்றுகள், உடைகள், சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினர். பள்ளி மாணவர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் வார்டு பகுதி மாநகராட்சி அலுவலர்கள், என்விரானிஸ்ட் அமைப்பு நிர்வாகிகள், லயன்ஸ் கிளப் சென்னை மெட்ரோ நண்பர்கள், பள்ளியின் மாணவ , மாணவியர், பெற்றோர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆசிரியை கிரேஸ் நன்றியுரை கூறினார்.

9 வயதில் 200 பதங்கங்கள் பெற்று உலக சாதனை

 

 

9 வயதில் 200 பதங்கங்கள் பெற்று உலக சாதனை

உலக சாதனை படைத்த இரட்டையர் மற்றும் அவர்களின் மாஸ்டருக்கு கௌரவ
டாக்டர் பட்டம்

புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த காரைக்காலில் உள்ள இன்டர்நேஷ்னல்
வி.ஆர் எஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அக்டமி இயக்குனர் மகாகுரு வி.ஆர்.எஸ்
குமாரிடம் மூன்று வயது முதல் கராத்தே சிலம்பம் யோகா கிக் பாக்ஸிங் குபுடோ
தேக்வாண்டோ போன்ற எண்ணற்ற தற்காப்பு கலைகலை கற்று இந்தியா மற்றும்
சர்வதேச அளவில் 200க்கும் மேற்பட்ட பதக்கங்களை வாங்கி புதுச்சேரி ஆளுநர் .
முதல்வர் மற்றும் பல்வேறு தரப்பினரிடமும் பாராட்டை பெற்ற காரைக்கால்
குட்ஷெப்பட் மேல்நிலை பள்ளியில் 5ம் வகுப்பு பயிலும் இரட்டையர்களான
கே ஸ்ரீ விசாகன் வயது 9 மற்றும் கே ஸ்ரீஹரிணி வயது 9 இவர்களின்
சாதனையை சிறப்பிக்கும் விதமாக பள்ளியின் சார்பாக தயார் செய்யப்பட்ட
புத்தகத்தை சமீபத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அவர்கள்
வெளியிட்டார் இவர்கள் உலகிலேயே முதன்முதலாக ஒரே நேரத்தில் சகோதர
சகோதரியாக பிறந்த இரட்டையர்கள் 6 வயது முதல் 9 வயது வரை கராத்தேவில்
இரண்டு பிளாக் பெல்ட் மற்றும் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் அதிக
பதக்கங்களை வாங்கி உலக சாதனை படைத்ததால் இவர்களுக்கு சமீபத்தில் வில்
மெடல் ஆப் வேர்ல்டு ரெக்கார்டர்ஸ் { WILL MEDAL OF WORLD RECORDS ) மற்றும்
வில் மெடல் கிட்ஸ் ரெக்கார்டர்ஸ் ( WILL MEDAL Kids RECORDS } ஆகியவற்றில்
உலக சாதனையை பதிவு செய்து சான்றுகள் வழங்கப்பட்டது இந்த சாதனையை
மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக யுனிவர்சல் அச்சிவர்ஸ் புக் ஆப் ரிக்கார்ட்ஸ் {
UNIVERSAL ACHIEVERS BOOK OF RECORDS.) மற்றும் பியூச்சர் கலாம்ஸ் புக் ஆப்
ரிக்கார்ட்ஸ் { future kalam back of records ) ஆகியவற்றிலும் உலக சாதனையாக
பதியப்பட்டது’ மேலும் இவ்விழாவில் ஸ்ரீ விசாகன் கண்களை கட்டிக் கொண்டு
குறுகிய நேரத்தில் பல்வேறு தற்காப்பு கலைகளை செய்து காண்பித்ததும் கே
ஸ்ரீஹரிணி குறுகிய நேரத்தில் பல்வேறு தற்காப்பு கலைகளின் ஆயுதத்தை
பயன்படுத்தி தற்காப்பு கலைகளை செய்து காண்பித்ததும் இருவரும் புதிய உலக
சாதனை செய்ததால் இவர்களுக்கு சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் கவுரவ
டாக்டர் பட்டம் வழங்கியது. மேலும் இரட்டையர்களின் வி.ஆர் எஸ் குமார்
குமாருக்கு இருபத்தைந்து வருடங்களாக தற்காப்பு கலைகளில் சேவையாற்றி
பல்வேறு மாணவ மாணவியர்கள் உருவாக்கியதால் அவர்களைப் பாராட்டி
அவருக்கும் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது 29.09 2019 அன்று சென்னை
அண்ணாநகரில் நடந்த விழாவில் உலக சாதனைக்கான சான்றுகள் மற்றும்
கெளரவ டாக்டர் பட்டத்துக்கான சான்றுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில்
யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் டாக்டர் பாபு பாலகிருஷ்ணன்,
முதன்மை அலுவலர் செல்வம் உமா மற்றும். பெற்றோர் மற்றும் பலர் இருந்தனர்

ஓசூர் சட்டமன்ற உறுப்பினரிடம் பட்டா வழங்க தமுமுக கோரிக்கை.

ஓசூர் சட்டமன்ற உறுப்பினரிடம் பட்டா வழங்க தமுமுக கோரிக்கை.

 

 

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் நகரத்திற்குட்பட்ட ஜெயசக்தி நகர் (முக்கால் சென்ட்) பகுதியில் இன்று* *29.09.19 வருகை புரிந்த ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் S.A.சத்யா,Mla அவர்களை சந்தித்து அப்பகுதி மக்கள் சார்பாக தமுமுக* *தலைமை கழக பேச்சாளர் ஒசூர் நவுஷாத் அவர்கள் அப்பகுதியில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு பட்டா,தெருவிளக்கு,கால்வாய் மற்றும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருமாறு கோரிக்கை வைத்தார்.*

*தமுமுக ஊடகப்பிரிவு*
*கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம்*