அடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாயினர் 5 பேர் படுகாயம் அடைந்தனர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம்

கோவை செட்டி வீதியில்

நேற்று முன்தினம் பெய்த கன மழையில் இரண்டு அடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாயினர் 5 பேர் படுகாயம் அடைந்தனர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் வீதம் நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் மாண்புமிகு எஸ் .பி. வேலுமணி அவர்கள் நிவாரண உதவிகளை வழங்கினார் உடன் மாவட்ட ஆட்சியர் ராசாமணி கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர்கள் சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் மாநகராட்சி ஆணையர் குமரவேல் பாண்டியன் துணை ஆணையர் மதுராந்தகி மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் வருவாய் கோட்டாட்சியர் தனலிங்கம் பேரூர் தாசில்தார் உள்பட அரசு அலுவலர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்

அருந்ததியர் சமூக மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

அருந்ததியர் சமூக மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் இன்று சமூக நீதிக் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அதில் புதுச்சேரி மாநில அருந்ததியர் மக்களுக்கு 3% இட ஒதுக்கீட்டையும் தமிழக அருந்ததியர் சமூக மக்களுக்கு உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் பிரகாரம் 6 சதவீதம் இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கிட கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திராவிடர் பேரவை அவைத்தலைவர் v. ராஜன் அவர்களும் மற்றும் பேரவை பொறுப்பாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்

அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்   

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் 

 

தலைவர் சாந்தி தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பணி மாறுதல் செய்த பின் காலி பணியிடங்களை நிரப்ப கோருதல் சார்பாக உள்ளூர் பணியிடம் மாறுதல் லோக்கல் பணியிட மாறுதல் மினி மைய பணியாளர்களுக்கு 3 ஆண்டு முடிந்தவர்களுக்கு பதவி உயர்வு உதவியாளர்களுக்கு 10 வருடம் ஆனவர்களுக்கு பதவி வழங்க வேண்டும் நீண்ட நாட்களாக பணியிட மாறுதல் விண்ணப்பித்த காத்துக்கொண்டு இருக்கிறார்கள் தற்போது பணியிட மாறுதல் நிரப்பாமல் நேரடி நியமனம் செய்யும்போது பணியாள  ர்கள் நிலை பாதிக்கப்படுகிறது அதனால் பணியிட மாற்றம் பதவி உயர்வு வழங்கிய பின்பு புதிய பணியிடங்களை நிரப்பும் படி சங்கத்தின் சார்பாக பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் மற்றும் R.சாந்தி தலைவர் துணைத்தலைவர் N.சித்தரா, M.பூங்கொடி, M.சரசாள், வேலுமணி, பொருளாளர் B.அலமேலு மங்கை செயலாளர் S.ஸ்டெல்லா இணைச்செயலாளர் N.சாரதா, P.பாக்கியம், B.மாலினி