சந்தோஷ் தலைமையில், ஆட்டோ ஓட்டுனர் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி

 

 

வேளச்சேரி

மெயின் ரோடு N.M.S கல்யாண மண்டபம் அருகில் வேளச்சேரி K சந்தோஷ் தலைமையில், ஆட்டோ ஓட்டுனர் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிதோஷ் தலைமையில், ஆட்டோ ஓட்டுனர் மற்றும் பொதுமக்களுக்கு
5 கிலோ அரிசி,
2கிலோ வெங்காயம்,
2 கிலோ தக்காளி,
1 கிலோ துவரம் பருப்பு ஆகியவற்றை வேளச்சேரி காவல் ஆய்வாளர் திரு. பிரின்ஸ் அருண் அவர்கள் வழங்கினார்

ஜெயின் சங்கத்தின் சார்பில் கொரோனா நிவாரணம் உதவி

 

கொரோனா

தொற்று பாதிப்பால் மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக வருமானமின்றி அவதி கவலைப்பட்டு வரும் நிலையில் சமூக அக்கறையுடன் ஜாதி மத,  பேதம் இல்லாமல் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அரிசி, எண்ணெய், பருப்பு, ரவை போன்ற பொருட்களைசென்னை ரேஸ் கோர்ஸ் அருகில் வசிக்கும் குடும்பங்களை சேர்ந்த சுமார் 250 நபர்களுக்கு பட்டாளம் ஜெயின் சங்கத்தின் நிர்வாகிகளான அஜித் லோடா, சாந்திலால், ஷோபா, விகாஷ் பர்மார் மற்றும்  முகேஷ் சுரானா ஸ்ரீநாத் சதீஷ் ஹரி கிருஷ்ணன் செல்வா ஆனந்தன் கார்த்திக்

ஆகியோர் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள். இதற்கு காவல்துறை அதிகாரிகள் கிண்டி சட்டம் ஒழுங்கு ஆய்வாலர் சந்துரு அவர்களின் தலைமையில் காவல்துறையினர் முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக தெரிவித்தனர். மேலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளிலிருந்து பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தேவை அறிந்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது,

கொரோனா – பாதுகாப்பு கருவி: மருத்துவப் பணி கடவுளுக்கான பணி என தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் செவிலியர்கள்

 

 

கொரோனா – பாதுகாப்பு கருவி:


மருத்துவப் பணி கடவுளுக்கான பணி என தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் தங்கள் பணிகளை இனிதே செய்து வருகின்றனர். அவர்களின் துயர் நீங்க எங்களின் முயற்சிதான் கொரோனாவில் செவிலியர் பாதுகாப்பு கருவி. இதுபோன்ற இக்கட்டான சூழல்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து செவிலியர்களுக்கு முடிந்த அளவில் பாதுகாப்பு அவசியமானதாகும் . அவ்வப்போது நோயாளிகளின் நலனில் முன்னேற்றம் உள்ளதா என தெரிந்து கொள்ள நோயாளிகளின் அறைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்த கருவியை பயன் படுத்தலாம். நோயாளிகள் தங்கள் இருப்பிடத்திலே இருந்து செவிலியர்களுக்கு அழைப்பு விடுப்பதன் மூலம் அவர்களின் அவ்வப்போது தேவைகளுக்கு மட்டுமே செவிலியர்கள் சென்று உதவலாம் .
இந்த கருவி மருத்துவமனையில் உள்ள அணைத்து படுக்கைகளையும் இணைக்கும் வயர்லெஸ் தொழில் நு ப்பம் கொண்டு அமைக்கப்பட்டதாகும். இதை ஒரு முறை அழுத்துவதனால் மருந்துகள், இரண்டு முறை அழுத்துவதனால் தண்ணீர் மற்றும் உணவு, மூன்று முறை அழுத்துவதன் மூலம் அவசர உதவி என நோய் தோற்று உள்ளவர்கள் சுலபமாக அவர்களின் தேவையின்போது செவிலியர்களுக்கு அழைப்பு விடுக்கலாம். நாங்கள் இந்த கருவியை எங்கள் அலுவலகத்தில் பல மாதங்கள் சோதனை செய்துள்ளோம். மேலும் இதனை மருத்துவமனையில் பொருத்த 5 நிமிடங்களே ஆகும். இந்த கருவி தற்போதைய சூழலுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என நம்புகின்றோம்.

துறைமுகம் தொகுதி எல்லீஸ் சாலையில் ஏழை எளியவர்களுக்கு முக கவசம் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

 

 

சென்னைக் கிழக்கு மாவட்டத் திமுக சார்பில் சென்னை துறைமுகம் தொகுதி எல்லீஸ் சாலையில்
ஏழை எளியவர்களுக்கு
முக கவசம் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் திரு பி கே சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்,

இதை தொடர்ந்து துறைமுகம் தொகுதி பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளையில் பயிலும் பெண்களுக்கு உணவு பொருட்கள், முக கவசம், கிருமி நாசினி மற்றும் 500 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன்.

முதல்வர் தினமும் அதிகாரிகளுடன் கூட்டம் நடத்துகிறார் ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்கட்சிகள் கூட்டம் நடத்த அழைப்பு விடுத்தால் அதற்கு தடை விதிக்கப்படுகிறது. எதிர் கட்சிகளின் குரலை அடக்கும் முயற்சியில் அரசு செயல்படுகிறது.

40 நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ளது நீங்கள் தரும் 1000 ரூபாய் மக்களுக்கு போதுமானது அல்ல 10000 ரூபாய் வழங்க வேண்டும்.

ஹைட்ரோ குளோரின் மாத்திரைகளை அமெரிக்கா மிரட்டியதும் மோடி வழங்கிவிட்டு தற்போது நமக்கு வரவேண்டிய டெபிட் கருவிகளை அமெரிக்கா பெற்றுவிட்டார்.

இரபிட் கருவிகள் வராததால் பலருக்கு சோதனை செய்யமுடியவில்லை எனவே இன்னும் பலரை சொதிக்காததால் எண்ணிக்கை குறைவாக உள்ளது. சோதனையை அதிகம் செய்தல் எண்ணிக்கை அதிகரிக்கும்

மக்களை தண்டிக்கும் அதிகாரம் நீதிதுறைகுதான் உள்ளது. வெளியே வரும் மக்களை
காவல்துறையினர் தாக்குவது கண்டிக்கத்தக்கது.

7600 கோடி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதியை மதியவரசு எடுதிவிட்டனர். நாங்கள் எங்கள் தொகுதிக்கு தேவையான நிதியை எப்படி ஒதுக்குவது. இந்த நிதியை அதிக அளவு குஜராத் மாநிலத்திற்கு ஒதுக்கப்படுகிறது.

முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று முன்பே கூறியவர் திமுக தலைவர் ஸ்டாலின். ஜனநாயகத்தில் எதிர் கட்சிகளின் குரலை கேட்டதால் தான் அனைத்து பிரட்சனைகளையும் அரசு அறிய முடியும் என்று கூறினார்.

ஜெயின் சங்கத்தின் நிர்வாகிகளான அஜீத் லோடா, சாந்திலால், ஷோபா, விகாஷ் பர்மார் மற்றும் முகேஷ் சுரானா ஆகியோர் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள்.

 

 

திரிசூலம்:

 கொரோனா தொற்று பாதிப்பினால் மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காகவும், வருமானமின்றி அவதி (கவலை) பட்டு வரும் நிலையில் சமூக அக்கறையுடனும் ஜாதி, மத பேதமில்லாமலும் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி, எண்ணெய், பருப்பு, ரவை போன்ற பொருட்களை
சென்னை திரிசூலத்தில் உள்ள சிவன் கோயில் அருகில் வசிக்கும் குடும்பங்களை சேர்ந்த சுமார் 200 நபர்களுக்கு பட்டாளம் ஜெயின் சங்கத்தின் நிர்வாகிகளான அஜீத் லோடா, சாந்திலால், ஷோபா, விகாஷ் பர்மார் மற்றும் முகேஷ் சுரானா ஆகியோர் அத்தியாவசிய பொருட்களை
வழங்கினார்கள்.
இதற்கு காவல்துறை அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் தெரிவித்தனர்.
மேலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளிலிருந்து பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களின் தேவை அறிந்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கென பத்தாயிரம் ரூபாய் செலவில் வென்டிலேட்டர்களை தயார்

 

 

கொரோனாவால் பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கென பத்தாயிரம் ரூபாய் செலவில் வென்டிலேட்டர்களை தயார் செய்துள்ளதாக தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச்செயலாளர் டாக்டர் கண்ணையா தெரிவித்துள்ளார்.

சென்னை சென்ட்ரலில் உள்ள சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், பெரம்பூர் ரயில்வே மருத்துவமனை, மதுரை, திருச்சி ரயில்வே மருத்துவமனைகள் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசு பயன்படுத்திக்கொள்ளலாம். அங்கு இதுவரை 1500 படுக்கை வசதிகள் உள்ளன என்று தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் அறிவித்துள்ளதாகவும், விரைவில் தேவையான படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்படும் எனவும், மருத்துவர்கள் பற்றாக்குறைக்கு நேர்முக தேர்வு நடைபெறுவதாக கூறினார்.

நாடு முழுவதும் கொரனா தொற்று பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் ரயில்வே ஊழியர்களும் அவர்களால் முடிந்த உதவிகளை செய்துவருவதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக நாடுமுழுவதும் இதுவரை 5 ஆயிரம் ரயில் பெட்டிகளை கொரோனா வார்டுகளாக மாற்றும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும் ராணுவ ஆராய்ச்சி மைய ஆலோசனையின்படி நோயாளிகளுக்கு செய்றகை சுவாசம் அளிக்கும் கருவிகளை (வெண்டிலேட்டர்) ஒவ்வொன்றும் ரூபாய் 10 ஆயிரம் செலவில் பத்தாயிரம் கருவிகளை தயாரித்து அளிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

இதனிடையே ரயில்வே ஊழியர்கள் தினமும் 20 லட்சம் முகக் கவசங்கள் மற்றும் சனிடைஸ் பொருட்கள் அவர்களாகவே தயாரித்து வருவதாகவும், இதுமட்டுமின்றி, 4 ஆயிரம் கட்டில்கள், 10 ஆயிரம் லிட்டர் கிருமி நாசினிகள் தயாரித்துள்ளதாகவும், தெரிவித்தார். மேலும் தேவையான உபகரணங்கள் அனைத்தும் நாடு முழுவதும் 170 இடங்களில் நடைபெற்று வருவதாக கூறினார்.
இதுபோன்ற அவசர நிலைகளில் ராணுவத்தினர் மட்டுமே உதவி வந்த நிலையில் தற்போது முதல்முறையாக ரயில்வே நிர்வாகம் உதவுவது இதுவே முதல்முறை என்றும் அவர் கூறினார்.

உணவு வழங்குவதை தடுத்து நிறுத்தும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்கள் MLA. சேகர்பாபு

 

 

அதிமுக சார்பில் சென்னை

கொளத்தூர் தொகுதி முழுவதும் அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்குவதை தடுத்து நிறுத்தும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்கள் MLA. சேகர்பாபு மற்றும் திமுக வழக்கறிஞர் பிரிவு கிரிராஜன் ஆராஜகத்தில் ஈடுபட்டனர். தொலைபேசி மூலம் மிரட்டல் எதுக்கும் அஞ்சாத அதிமுக செயல்வீரர் கொளத்தூர் டி.கிருஷ்ணமூர்த்தி*

சென்னை கொளத்தூர் தொகுதியில் 11 அம்மா உணவகங்கள் உள்ளன. இந்த உணவகங்களில் அதிமுக சார்பில் இலவசமாக மூன்று வேளையும் உணவு வழங்க அதிமுகவைச் சேர்ந்த கொளத்தூர் டி. கிருஷ்ணமூர்த்தி நடவடிக்கை எடுத்தார். இதற்காக மாநகராட்சி நிர்வாகத்திடம் முறைப்படி ஒப்புதலும் பெற்றார். அம்மா உணவக உணவுக்கு உண்டான நிதியை தானே ஏற்பதாக கிருஷ்ணமூர்த்தி அறிவித்தார்.

இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினின் ஆட்கள் அதிமுகவினர் இலவசமாக உணவு வழங்குவதை தடுத்து நிறுத்த சதி செய்துள்ளனர். அதிமுகவைச் சேர்ந்த கொளத்தூர் கிருஷ்ணமூர்த்திக்கு திமுகவினர் தொலைபேசியில் மிரட்டல் விடுத்தனர். மேலும் இலவசமாக உணவு வழங்கக் கூடாது என மாநகராட்சி அதிகாரிகளையும் திமுகவினர் மிரட்டியுள்ளனர். இதனால் மாநகராட்சி அதிகாரிகள் அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கக் கூடாது என்று திடீர் என அறிவித்தனர். இதனால் இலவசமாக சாப்பிடலாம் என வந்த ஏழை எளிய மக்கள் திமுகவினரை திட்டிச் சென்றனர். அதிமுக இலவசமாக உணவு வழங்குவதை தடுத்து நிறுத்திய திமுக அராஜகத்தை கண்டு மக்கள் எரிச்சலடைந்தனர்.

இதனால் அதிமுகவினர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு இலவசமாக உணவு வழங்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதனால் அயனாவரம் அம்மா உணவகம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பேட்டி,,,, கொளத்தூர் டி.கிருஷ்ணமூர்த்தி, அதிமுக

தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் சார்பிலும் பல்வேறு உதவிகள்

 

 

கொரோணா வைரஸிலிருந்து மக்களை காக்க

கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் மற்றும் உணவு பொருட்கள் விநியோகம்…
தமிழகத்தில் ஊரடங்கினால் ஏழைகள், தினக்கூலிகள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவின்றி தவிக்கும் அவர்களுக்கு அரசு சார்பிலும், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் சார்பிலும் பல்வேறு உதவிகள் செய்யப்படுகின்றன. சென்னை வேளச்சேரி டான்சி நகர் நலவாழ்வு சங்கம் சார்பில் ஏழை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களான மளிகை, அரிசி மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. டான்சி நகர் நலவாழ்வு சங்கம் சார்பில், ஊரடங்கு துவங்கிய நாள்
முதல், வேளச்சேரி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, காலையில் தொடர்ந்து காலை உணவு வழங்கி வருகின்றனர். அதைத் தொடர்ந்து மிகவும் ஏழ்மைநிலையில் உள்ளவர்களுக்கு, அரிசி, மளிகை
பொருட்கள் வழங்கினர்.
அதைத் தொடர்ந்து பொது மக்களுக்கு, கபசுர குடிநீர்,
கிருமி நாசினி முக கவசம் டான்சி நகர் நல வாழ்வு சங்கம் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் மருத்துவர் பிரபு தாஸ் உடன் நலவாழ்வு சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு வழங்கினார்கள்.

தமிழ்நாடு குருமன்ஸ் நலசங்கம் ஏழைகளுக்கு இலவச உணவு வினியோகம்

 

 

தமிழ்நாடு குருமன்ஸ் நலசங்கம் ஏழைகளுக்கு இலவச உணவு வினியோகம்

சென்னை: தமிழ்நாடு குருமன்ஸ் நல சங்கத்தின் சார்பில் திருவல்லிக்கேணி பகுதிவாழ் ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்யும் வகையில் தினந்தோறும் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு குருமன்ஸ் நல சங்கத்தின் பொதுச் செயலாளர் தனசேகரன் (எ) அழகு தனா தலைமையில் தினந்தோறும் உணவு வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார் தமிழ்நாடு குருமன்ஸ் நல சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .

கல்யாணபுரம் குடிசை வாழ் மக்களுக்கு அரசி, மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது..

 

 

STREET VISION டிரஸ்ட் சார்பாக கோரோண வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும்144 தடை விதிக்க பட்டுள்ளாதால் அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் பாதிக்கபட்டுள்ள குடிசை வாழ் மக்களுக்கு தொடர்ந்து 16.வது நாளாக நல உதவிகள் செய்து வருகிறார்கள் இதன் தொடர்ச்சியாக இன்று சென்னை யானைக்கவுனி அருகில் கல்யாணபுரம் குடிசை வாழ் மக்களுக்கு அரசி, மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது..

இந்த ஏற்பாட்டினை STREET VISION சமூக நல அறக்கட்டளை நிறுவனர் சீதா தேவி ஏற்பாடுட்டில்
நிர்வாக இயக்குனர் சுந்தரி மற்றும் நடிகை காயத்ரி அவர்களுடன் ஒருங்கிணைப்பாளர் ரவிராஜ், ஆகியோர் கலந்துகொண்டு வழங்கினார்கள்…