அனைவருக்கும் 74 வது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் சார்பில்,

 

அனைவருக்கும் 74 வது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் சார்பில்,

ஒட்டுநர்களின் இறுதி கட்ட நடைப்பிண கோரிக்கை மனு

 

தமிழக அரசுக்கு ஒட்டுநர்களின் இறுதி கட்ட நடைப்பிண கோரிக்கை மனு

கோரிக்கைகள் :
1. தமிழகத்தில் பேஜ் லைசன்ஸ் பெற்றுள்ள அனைத்து ஓட்டுநர்களுக்கும் 20000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

2. பொது பயன்பாட்டு வாடகை வாகனங்களுக்கு ஊரடங்கு காலத்தில் EMI களுக்கு விதிக்கப்பட்ட வட்டி நீக்கப்பட வேண்டும்.

3.பெட்ரோல் டீசல் விலையை GST வரம்புக்குள் கொண்டு வரப்பட வேண்டும் அல்லது வாடகை வாகனங்களுக்கு அரசு சார்பில் மானிய விலையில் நாள் ஒன்றுக்கு 20 லிட்டர் டீசல் வழங்கப்பட வேண்டும்.

4. ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் , வாடகை கார்.மற்றும் மேக்ஸி கேப்களுக்கு முறையான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

5. அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கும் அரசு சார்பில் COVID – 19 இன்சூரன்ஸ் வழங்கப்பட வேண்டும்.

6. ஊரடங்கு காலத்தில் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட காலாண்டு சாலை வரிகள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.

7. தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியிடம் பேரிடர் இழப்பு வழங்க வலியுறுத்த வேண்டும் .
என்ற கோரிக்கைகள் தமிழக அரசுக்கு வைக்கப்பட்டது..

30 நடமாடும் மருத்துவ வாகனங்கள் ஜெயின் மிஷன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது.

 

 

 

 

 

30 நடமாடும் மருத்துவ வாகனங்கள் ஜெயின் மிஷன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது.

கொரோனா இல்லாத நகரமாக உருவாக்கும் விதமாக வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை செய்யும் அனைத்து வசதிகளுடன் கூடிய 30 நடமாடும் வாகனங்கள் ஜெயின் மிஷன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டது.

சென்னை தி.நகரில் உள்ள சங்கர்லால் சுந்தேர்பாய் சசுன் ஜெயின் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொரோனா பரிசோதனை செய்யும் அனைத்து வசதிகளுடன் கூடிய 30 நடமாடும் வாகனங்கள் தமிழக அரசுக்கு அளிக்கப்பட்டன. ஜெயின் மிஷன் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் வழங்கப்பட்ட இந்த 30 நடமாடும் மருத்துவ வாகனங்களின் இயக்கத்தை சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மக்கள் தொகை அடர்த்தி அதிகமுள்ள சென்னை மாநகரில், நோய்த்தொற்றினை கட்டுப்படுத்த காய்ச்சல் முகாம்கள் பெரிதளவில் பயனளித்துள்ளதாக கூறினார். இந்நிலையில் அனைத்து வசதிகளும் கொண்ட இந்த நடமாடும் மருத்துவ வாகனங்கள் நோய் தொற்று உள்ளவர்களுக்கு எந்த சிரமமின்றி இந்த வாகனத்தின் மூலம் கொரோனா பரிசோதனையை இலவசமாக செய்துகொள்ளலாம் என்றார்.

தொடர்ந்து பேசிய பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னையில் 8,16,653 பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளதாகவும்
3,80,421 பேர் குணமடைந்துள்ளதாகவும் கூறினார். மேலும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 4,24,452 பேர் தற்பொழுது தனிமைபடுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறினார். நோய் தொற்று ஏற்பட்டவர்கள் சிரமமின்றி பரிசோதித்து சிகிச்சை பெற்றுக்கொள்ள இது போன்ற நடமாடும் வாகனங்கள் உதவியாக இருக்கும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஜினிஸ்வர் இன்ப்ரா வென்ச்ர்ஸ் நிறுவத்தின் தலைவர் பிரமோத் சோரிடியா, கீழ்பாக்கம் ஜெயின் சங்க துணை தலைவர் கிம்ராஜ் சக்காரியா, மெட்ராஸ் ஸ்டீல் மற்றும் பைப் உரிமையாளர் சங்க தலைவர் நரேந்திர சக்காரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சென்னை பெருநகர ஒலி, ஒளி அமைப்பாளர்களுக்கு நிவாரண உதவி

 

 

 

சென்னை பெருநகர ஒலி, ஒளி அமைப்பாளர்களுக்கு நிவாரண உதவி

சென்னை :
சென்னை பெருநகர ஒலி,ஒளி அமைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் ஊரடங்கு காரணமாக வேலையின்றி தவித்து வரும் ஒலி, ஒளி அமைப்பாளர்கள், வாடகை பாத்திர நிலையம், வாடகைக்கு டெக்ரேஷன் செய்யும் தொழிலாளர் குடும்பங்களுக்கு அரிசி பைகள் வழங்கப்பட்டது.

சென்னை பெருநகர ஒலி,ஒளி அமைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர் நலச்சங்கத்தின் தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாம்பலம் காவல்துறை உதவி ஆணையர் கலியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தொழிலாளர்களுக்கு அரிசி பைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் தலைவர் சந்திரசேகர்,

ஊரடங்கு தடை உத்தரவால் தமிழகம் முழுவதும் ஒலி,ஒளி அமைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மார்ச் முதல் ஜூன் வரை கோயில் திருவிழாக்கள்,விசேஷ நிகழ்ச்சிகள் நடக்கும். இது போன்ற நேரத்தில் தடை உத்தரவால் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.ஒலி, ஒளி அமைப்பாளர்கள் குறித்து மாவட்டம் வாரியாக கணக்கெடுப்பு நடத்தி அரசு எங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றார்

இந்த நிகழ்ச்சியில்
சென்னை பெருநகர ஒலி,ஒளி அமைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர் நலச்சங்கத்தின் செயலாளர் குணசேகரன்,பொருளாளர் முகமது சித்திக்,துணைத்தலைவர் சுப்பிரமணியன்,நிர்வாகி சக்திவேல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

இறைச்சிக் கூடத்தையும் திறக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

 

 

 

 

புளியந்தோப்பு இறைச்சிக் கூடத்தை திறக்கக்கோரி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

சென்னை : சென்னை புளியந்தோப்பு இறைச்சிக் கூடத்தை திறக்கக்கோரி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊரடங்கு தளர்வில் இறைச்சி கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் வில்லிவாக்கம்,சைதாப்பேட்டை,கள்ளிக்குப்பம்
இறைச்சிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் புளியந்தோப்பு இறைச்சிக் கூடத்தையும் திறக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து இறைச்சி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சபிர் அஹமத், காப்பாளர் அன்பு வேந்தன் ஆகியோர் கூறுகையில் சென்னையில் ஊரடங்கு தொடங்கிய நிலையில் புளியந்தோப்பு இறைச்சிக்கூடம் 29-4-2020 முதல் தொடர்ச்சியாக அடைக்கப்பட்டுள்ளது. இதனால் இத்தொழிலை நம்பியுள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.
இறைச்சிக்கூடத்தை திறக்கக்கோரி பலமுறை அமைச்சர்களிடத்திலும் மாநகராட்சி அதிகாரிகளிடத்திலும் முறையிட்டும் பயனில்லை.தற்போது சென்னையில் முழு ஊரடங்கு தளர்வில் இறைச்சிக்கூடங்களை திறக்க அனுமதி வழங்கியுள்ள நிலையில் புளியந்தோப்பு இறைச்சிக் கூடத்தையும் திறக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

வியாசர்பாடி சித்த மருத்துவ மையத்தில் 8 பேர் டிஸ்சார்ஜ்

 

 

அமைச்சர் க.பாண்டியராஜன் பழங்கள் அடங்கிய பூங்கொத்து கொடுத்து வழியனுப்பினார்

சென்னை, ஜூலை.

சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் இயங்கி வரும் கொரோனா தடுப்பு சித்த மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 8 பேர் இன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். சிகிச்சை முடிந்து வீடி திரும்பியவர்களுக்கு அமைச்சர் க.பாண்டியராஜன் தலைமையில் மருத்துவர்களும், மாநகராட்சி ஊழியர்கள் பழங்கள் அடங்கிய பூங்கொத்தை கொடுத்து உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.

அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது,

சென்னையில் கொரோனா வளர்ச்சி விதிகம் குறைந்து வருகிறது. அடுத்த சில நாட்களில் ஏற்கனவே போடப்பட்ட ஊரடங்கின் பலன் தெரியும்.

கடந்த 23 ஆம் தேதி முதல் செயல்பட்டு வரும் இந்த மருத்துவ மையத்தில் 107 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 200 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 8 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இங்கு ஆக்சிஜன் பயன்பாட்டிற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை ஆக்சிஜன் பயன்பாடு யாருக்கும் தேவைப்படவில்லை.

தண்டையார்பேட்டை மண்டலத்தில் மொத்த பாதிப்பில் 30 சதவிகிதம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 67 சதவிகிதம் பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

எஸ்எம்எஸ் என்ற கோட்பாட்டில் சமூக இடைவெளி, முககவசம், கைகழுவதல் போன்றவற்றின் அடிப்படையில் ஊரடங்கு தளர்வை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். இதை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
இன்னொரு கொரோனா அலை உருவாக கூடாது என்பதில் கவனமாக பணியாற்றி வருகிறோம்.

உணவே மருந்து அடிப்படையில் சித்த மருத்துவ மையங்களில் உணவு வழங்கப்படுகிறது. தேவைக்கேற்ப சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் சித்த மருத்துவ மையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா மட்டுமல்லாமல் அனைத்து நோய்களுக்கு எதிராக உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்க சித்த மருத்துவ முறை பரிந்துரைக்கப்படுகிறது.

பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவ முறையை தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது.

கொரோனா தற்கொலைகளை தடுக்க தமிழக அரசு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தொற்று உறுதியாகி சில தினங்களுக்குள் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு பயமில்லாத சிகிச்சை பெற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என அவர் தெரிவித்தார்.

இதில் அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், சித்த மருத்துவ டாக்டர் சாய்சதீஷ் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

#மித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் 9381811222

#பொதுச் செயலாளர் வி பாலமுருகன்

மித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் பொதுச் செயலாளர் வி பாலமுருகன்

மித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் பொதுச் செயலாளர் வி பாலமுருகன்

கொரோனா தடுப்பு நிவாரண பணியாக வியாசர்பாடி அமைச்சர் க.பாண்டியராஜன், ஆய்வு

 

 

 

 

அமைச்சர் க.பாண்டியராஜன், ஆய்வு தண்டையார் பேட்டை மண்டலத்திர்க்குட்பட்ட வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில்
கொரோனா தடுப்பு நிவாரண பணியாக வியாசர்பாடி
சத்தியமூர்த்தி நகர் பகுதியில்
உள்ள ஆரம்ப சுகாதார
நிலையத்தில் அமைச்சர்
க.பாண்டியராஜன், வட
சென்னை வடக்கு (கிழக்கு)
மாவட்ட கழக செயலாளர்
ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர்
ஆய்வு பணிகளை மேற்
கொண்டு களப்பணியாளர்க
ளுக்கு ஆலோசனைகளை
வழங்கினர்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

 

 

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வடசென்னை காங்கிரஸ் கமிட்டி தலைவர்
எம்.எஸ்.திரவியம் தலைமையில்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து
பழைய வண்ணாரப்பேட்டை தபால் நிலையம்
அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மத்திய அரசுக்கு எதிராக ஐம்பதுக்கும்
மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று
கண்டன கோஷங்களை எழுப்பினர்.

வங்கியின் மார்ச் 31, 2020 உடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மார்ச் 31, 2020 உடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள்

 

 

 • வங்கியின் CASA 2020 மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி 40.26% (உள்நாட்டு 40.67%) ஆக உயர்ந்துள்ளது.  இது 2019 மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி 38.30% (உள்நாட்டு 38.72%) ஆக இருந்தது. வருடாந்திர வளர்ச்சியுடன், மொத்த காசா 31.03.2019 நிலவரப்படி ரூ .85227 கோடியிலிருந்து 31.03.2020 நிலவரப்படி ரூ .89751 கோடியாக உயர்ந்துள்ளது.  சேமிப்பு கணக்கு  தொகை இருப்பு மார்ச் 31, 2019 ஐ விட மார்ச் 31, 2020 நிலவரப்படி 6.96% வருடாந்திர  வளர்ச்சியைப் பதிவு செய்தது.
 • மொத்த வர்த்தகம் 2020 மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி ரூ .3,57,723 கோடியாக இருந்தது, இது 2019 மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி ரூ .3,74,530 கோடியாக இருந்தது.
 • மொத்த வைப்பு ரூ. 2019 மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி

 

ரூ.2,22,534 கோடியிலிருந்து 2020 மார்ச் 31 ஆம் தேதி வரை 2,22,952 கோடி ரூபாய் ஆக உயர்ந்துள்ளது.  உயர் வட்டி வைப்புத்தொகைகளின் செறிவைக் குறைத்து,  குறைந்த கால மற்றும் சில்லறை வைப்புத்தொகையை வங்கி அதிகரித்து,  நிதி செலவைக் குறைத்துள்ளது

 

 • மொத்த கடன் தொகை  ரூ. 2019 மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி ரூ .1,51,996 கோடியிலிருந்து,  2020 மார்ச் 31 ஆம் தேதி வரை 1,34,771 கோடி ரூபாய் பதிவு செய்தது  சாத்தியமான இடங்களில் மற்றும் வலியுறுத்தப்பட்ட நலிவுற்ற துறைகளில் உள்ள கணக்குகளிலிருந்தும் வங்கி வெளியேறிவிட்டது.
 • 31.03.2020 உடன் முடிவடைந்த ஆண்டிற்கான இயக்க லாபம்

 

ரூ .3534 கோடியாக இருந்தது.

 

 • 31.03.2020 உடன் முடிவடைந்த ஆண்டின் மொத்த வருமானம் ரூ.20766 கோடியாக உள்ளது, இது முந்தைய ஆண்டிற்கான (2018-19) ரூ .21838 கோடியாக இருந்தது.
 • வட்டி வருமானம் ரூ. 31.03.2020 உடன் முடிவடைந்த ஆண்டிற்கான 17406 கோடி ரூபாய்.
 • வட்டி அல்லாத வருமானம் ரூ.3360 கோடியாக உள்ளது; இது மொத்த வருமானத்தில் 16% ஆகும்
 • மொத்த செலவு 31.03.2020 உடன் முடிவடைந்த ஆண்டிற்கு ரூ .17232 கோடியாக உள்ளது, இது 2019 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான ரூ .16804 கோடியாக இருந்தது.

 

ஊழியர்களின் செலவுகள் 31.03.2020 நிலவரப்படி ரூ.3241 கோடியாக உள்ளது. இதில் 2019 மார்ச் அடிப்படையாகக் கொண்ட  ஊதிய நிலுவைத் தொகை (பகுதி)  2647 கோடி ரூபாய் அடங்கும்

 

வருமானத்திற்கெதிரான செலவு  விகிதம்  மார்ச் 2019 நிலவரப்படி 46.93 சதவீதத்திலிருந்து மார்ச் ’20 நிலவரப்படி 59.21 சதவீதமாக அதிகரித்துள்ளது.

 

 • 31.03.2020 உடன் முடிவடைந்த ஆண்டிற்கான வராக்கடன்  கணக்குகளில் வசூல்  ரூ. 21430 கோடி ரூபாய்.  இது  31.03.2019 உடன் முடிவடைந்த ஆண்டிற்கான ரூ.14669 கோடியாக இருந்தது.  புதிய வாராக்கடன் ரூ.7225 கோடியும், இதர செலவினங்கள் ரூ 438 கோடியும் இதில் அடங்கும்.
 •   மொத்த வாராக்கடன் மார்ச் ’19 நிலவரப்படி 21.97 சதவீதத்திலிருந்து மார்ச் ’20 வரை 14.78 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

 

–   நிகர  வாராக்கடன்  மார்ச் ’19 நிலவரப்படி 10.81         சதவீதத்திலிருந்து மார்ச் 20 நிலவரப்படி   5.44     சதவீதமாகக் குறைக்கப்பட்டது

        –   வாராக்கடன் பாதுகாப்பு  இருப்பு விகிதம் (பி.சி.ஆர்)

            மார்ச் ’19 நிலவரப்படி 71.39 சதவீதத்திலிருந்து, 

             மார்ச் ’20 நிலவரப்படி 86.94 சதவீதமாக 

              மேம்படுத்தப்பட்டுள்ளது

 

மார்ச் 31, 2020 உடன் முடிவடைந்த காலாண்டிற்கான செயல்திறன் சிறப்பம்சங்கள் QoQ (தொடர்)

 


 1. மொத்த வர்த்தகம் 2020 மார்ச் 31 நிலவரப்படி ரூ .3,57,723 கோடியாக இருந்தது 

 

 1. மொத்த வைப்பு ரூ. 31 மார்ச் 2020 நிலவரப்படி 2,22,952 கோடி ரூபாய் 

 

 1. வங்கியின் CASA 2020 மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி 40.26% ஆக இருந்தது, இது 2019 டிசம்பர் 31 ஆம் தேதி நிலவரப்படி 39.10% ஆக இருந்தது.

 

 1. மொத்த அட்வான்ஸ் 2020 மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி ரூ .1,34,771 கோடியாக உள்ளது. 31 டிசம்பர் 2019 நிலவரப்படி 1,38,643 கோடி ரூபாய். திறமையான மூலதன பயன்பாட்டிற்காக வங்கி தனது கடன் புத்தகத்தை மீண்டும் சீரமைப்பதில் கவனம் செலுத்தியது.

 

 1. இயக்க லாபம் ரூ. 2020 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் 1197 கோடி ரூபாய். 2019 டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் 762 கோடி ரூபாய்.

 


 1. 2020 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் நிகர லாபம் ரூ .144 கோடி.
 2. மொத்த வருமானம் ரூ. 2020 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் 5,537 கோடி ரூபாயாக இருந்தது, இது 2019 டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் ரூ .5198 கோடியாக இருந்தது.

இது  சொத்து விற்பனையின் லாபம் 132 கோடி ரூபாய்,  இதர வருமானம் ரூ .80 கோடி, முதலீடுகளுக்கான வட்டி மூலம் 52 கோடி ரூபாய் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். 

 1. வட்டி வருமானம் ரூ. 4,442 கோடி, 2020 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 2019 டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் 4352 கோடி ரூபாய்.

 

 1. வட்டி அல்லாத வருமானம் ரூ. 1,095 கோடி 2020 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 2019 டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் 846 கோடி ரூபாய்.

 

 1. மொத்த செலவு ரூ. 4,340 கோடி, 2020 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 31 டிசம்பர் 2019 உடன் முடிவடைந்த காலாண்டில் 4435 கோடி ரூபாய். இதன் மூலம் ரூ. 95 கோடி

 

 1. வாராக்கடன்மேலாண்மை: மொத்தவாராக்கடன்  மார்ச் 31, 2020 நிலவரப்படி ரூ. 19913 க்கு எதிராக ரூ. 31 டிசம்பர் 2019 நிலவரப்படி 23734 கோடி. மொத்த வாராக்கடன் அளவிலும் சதவீதத்திலும் குறைந்து  முன்னேற்றம் அடைந்துள்ளது.

 

 1. மொத்த கடன் வசூல்  மார்ச் 20 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் 5386 கோடி ரூபாய்.  டிசம்பர் ’19 உடன் முடிவடைந்த காலாண்டில் 7085 கோடி ரூபாய். மார்ச் ’20 உடன் முடிவடைந்த காலாண்டில் மொத்த புதிய வாராக்கடன் (தற்போதுள்ள வாராக்கடன் கணக்குகளுக்கான பற்றுகள் தவிர) 1293 கோடி ரூபாய்.  டிசம்பர் ‘19 உடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.1648  கோடி ரூபாய்.

 

 1. நிகர வாராக்கடன் 2020 மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி ரூ .6603 கோடியாக இருந்தது (5.44% என்ற விகிதத்துடன்).  இது 2019 டிசம்பர் 31 ஆம் தேதி நிலவரப்படி ரூ.7087 கோடியிலிருந்தது (5.81% விகிதத்துடன்) இது நிகர வாராக் கடனை ரூ.484 கோடியாக அளவிற்கு குறைத்தது.

 

 1. பாதுகாப்பு இருப்பு விகிதம் 2020 மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி 86.94% ஆக உயர்ந்துள்ளது, இது 2019 டிசம்பர் 31 ஆம் தேதி நிலவரப்படி 86.20% ஆக இருந்தது.

 

 

 

 

 

 

மார்ச் 31, 2020 உடன் முடிவடைந்த காலாண்டிற்கான செயல்திறன் சிறப்பம்சங்கள் – Q4 மார்ச்’20 முதல் Q4 மார்ச்’19 வரை ( காலாண்டு ஒப்பீடு) 

 

 1. 2020 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் இயக்க லாபம் 5.83% வளர்ச்சியைப் பதிவு செய்து ரூ .1197 கோடியாக உள்ளது.  இது 2019 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.1131.50 கோடியாக இருந்தது.

 

 1. 2020 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் நிகர லாபம் ரூ .144 கோடியாக உள்ளது.  2019 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் 1985.16 கோடி ரூபாய்.

 

 1. மொத்த வருமானம் ரூ. 2020 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் 5,537 கோடி ரூபாயாக இருந்தது.  இது 2019 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் ரூ .5474 கோடியாக இருந்தது.

 

 1. வட்டி வருமானம் ரூ. 4,442 கோடி, 2020 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 2019 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் 4556 கோடி ரூபாய்.
 2. வட்டி அல்லாத வருமானம் ரூ. 1,095 கோடி 2020 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 2019 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் 917 கோடி ரூபாய்.

 

 1. 2020 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டின் மொத்த செலவு தொடர்ந்து ரூ .4340 கோடியாக உள்ளது. இயக்க செலவுகள் ரூ. 2020 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் 1430 கோடி ரூபாய். 2019 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் 1265 கோடி ரூபாய்.

 

 1. வாராக்கடன் மேலாண்மை: 2020 மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி மொத்த வாராக்கடன்  ரூ. 19913 கோடி (14.78% விகிதத்துடன்).  ரூ. 31 மார்ச் 2019 நிலவரப்படி 21.97% விகிதத்துடன் 33398 கோடி ரூபாய்.

 

 1. மொத்த கடன் வசூல்  மார்ச் ‘20 உடன் முடிவடைந்த காலாண்டில் 5386 கோடி ரூபாய்.  மார்ச் ‘20 உடன் முடிவடைந்த காலாண்டில் மொத்த புதிய வாராக்கடன் ரூ. 1350 கோடி.  காலாண்டில் புதிய வாராக்கடன் விட  கடன் வசூல்   கணிசமாக அதிகமாக உள்ளது, முக்கியமாக புதிய வாராக் கடன்களை தடுக்கும் நடவடிக்கைகள்  மற்றும் NPA / OTS கணக்குகளில் வசூல் மேம்படுத்துவதில் முன்னுரிமை செலுத்தப்பட்டது.

 

 1. நிகர   வாராக்கடன் மார்ச் 31 ‘20 தேதியின்படி ரூ. 6603 கோடி ( 5.44% விகிதத்துடன்).  இது மார்ச் 31, 19 வரை 10.81% விகிதத்துடன் 14368 கோடி ரூபாய்.

 

 

 

 1. பாதுகாப்பு இருப்பு விகிதம் 2020 மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி 86.94% ஆக மேம்படுத்தப்பட்டுள்ளது, இது 2019 மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி 71.39% ஆக இருந்தது.

 

கேபிடல் அட்வெக்ஸி ரேஷியோ (CRAR):

 

Particulars Basel III as on 31.03.2020 Regulatory Requirement
CET 1 8.21% 5.50%
Tier I 8.21% 7.00%
Tier II 2.51% 2.00%
Total CRAR                                        10.72% 9.00%*

 

மொத்த மூலதனத்தில் 2019-20 நிதியாண்டில் மத்திய அரசின் பங்கீடு இரண்டு தவணையாக ரூ.3857 கோடி மற்றும் ரூ. 4360 கோடி ரூபாய் பெறப்பட்டது.    கடன் பத்திரங்களின் மூலம் ரூ. 300 கோடி பெறப்பட்டது.

 

 

முக்கிய நிதி விகிதங்கள்:

 

வைப்பு தொகைக்கான கடன் விகிதம்  31.03.2020 நிலவரப்படி 60.45% ஆக உள்ளது, 31.03.2019 தேதியின்படி 68.32% ஆக உள்ளது

 

31.03.2020 உடன் முடிவடைந்த ஆண்டிற்கான வைப்புத்தொகையின் சராசரி செலவு 5.33%, 31.03.2019 உடன் முடிவடைந்த ஆண்டிற்கான 5.39%

 

31.03.2020 உடன் முடிவடைந்த ஆண்டிற்கான கடன் மீதான வருவாய் 7.01%;  31.03.2019 உடன் முடிவடைந்த ஆண்டிற்கான கடன் மீதான வருவாய் 7.18%.

 

வருவாய் மீதான செலவு விகிதம் 31.03.2020 உடன் முடிவடைந்த ஆண்டிற்கு 59.21%; இதுவே  31.03.2019 உடன் முடிவடைந்த ஆண்டிற்கான வருவாய் மீதான செலவு விகிதம் 46.93%  ஆக இருந்தது

 

நிகர வட்டி வருவாய் அளவு 31.03.2020 உடன் முடிவடைந்த காலாண்டில் 2.30% மற்றும் 31.03.2020 உடன் முடிவடைந்த ஆண்டிற்கு 2.03%.

 

இந்திய அரசாங்கத்தின் மூலதன தகவல்

  

இந்திய அரசிடமிருந்து 31.03.2020 உடன் முடிவடைந்த காலாண்டில், ரூ. 27.02.2020 அன்று 4360 கோடி ரூபாய் மூலதன உட்செலுத்துதலுக்காக வங்கி பெற்றது.  இதற்கிணையாக முன்னுரிமை அடிப்படையில்  385.15  கோடி ஈக்விட்டி பங்குகளை ஒதுக்கியுள்ளது. இதன்படி வங்கியில் இந்திய அரசின் பங்கு மூலதனம்  95.84% ஆக அதிகரித்துள்ளது.

 

நட்டம் ஏற்படும் கிளைகளை குறைத்தல்:

 

கடந்த ஆறு ஆண்டுகளாக நட்டம் ஏற்படும் கிளைகளின் இயக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விவரங்கள் Mar-15 Mar-16 Mar-17 Mar-18 Mar-19 Mar-20
கிளைகள் 3381 3397 3373 3332 3280 3270
நட்டம்ஏற்படும் கிளைகள் 742 718 536 371 157 115
நட்டம் ஏற்படும் கிளைகளின்%  21.95 21.14 15.89 11.13 4.79 3.52

 

மார்ச் 2014 இல் வங்கிக்கு 772 நட்டம்ஏற்படும் கிளைகள்

இருந்தன, இது விரைவான கிளை விரிவாக்கத்தின் உடனடி விளைவுகளில் ஒன்றாகும். அலுவலகங்களின் தொடர்ந்த கட்டுப்பாடுகளாலும் முயற்சிகளாலும் 2014 மார்ச்சில் 772  இருந்த  நட்டம்ஏற்படும் கிளைகளின் எண்ணிக்கையை 2020 மார்ச் மாதத்தில் 115 கிளைகளாகக் குறைக்க உதவியது. சில்லறை மற்றும் சிறு மற்றும் குறுந்தொழில் கடன்களுக்கான அதிக முன்னுரிமை  மேம்படுத்தப்பட்டுள்ளது.  கடன்களை பரவலாக்குவதோடு  நட்டத்தில் இயங்கும் கிளைகளை மேலும் குறைப்பதில் தொடர்ந்து முயற்சி மேற்கொள்வதில் உறுதியாக உள்ளது.