இந்தியத் தர நிறுவன (BIS) வழக்கறிஞராக மூ.பழநிமுத்து  நியமனம்.

இந்தியத் தர நிறுவன (BIS) வழக்கறிஞராக மூ.பழநிமுத்து நியமனம்.

மத்திய அரசின் உணவு, பொது வினியோகம் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் கீழ், நுகர்வுப்பொருள்கள் மற்றும் பல்வேறு நுகர்வோர் சேவைகளின் தரச்சான்று நிர்ணயம், தரச்சான்று அளித்தல் மற்றும் கண்காணிப்பு ஆகிய பணிகளைச் செய்து வரும் இந்தியத் தர நிறுவனம், தனது சார்பில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னையில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் வழக்காடுவதற்காக திரு.மூ.பழநிமுத்து அவர்களை தமது வழக்கறிஞராக நியமித்துள்ளது.

ஏற்கனவே, வழக்கறிஞர் திரு.மூ.பழநிமுத்து, விமான நிலையங்கள் ஆணையம், சென்னைத் துறைமுகம், மத்திய நெகிழிப் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றின் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.