இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 160-வது பிறந்த நாளை முன்னிட்டு

 

 

அம்பேத்கர் மக்கள் படை சார்பில் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கிண்டி : அம்பேத்கார் மக்கள் படை சார்பில் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 160-வது பிறந்த நாளை முன்னிட்டு கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு அம்பேத்கர் மக்கள் படையின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் மு. மதிபறையனார் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் அடையாறு கண்ணன், கரீம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்

இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 160 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு

தமிழ்நாட்டின் முன்னோடி சமூக சீர்திருத்தவாதியும் லண்டன் வட்டமேசை மாநாடு உட்பட
உலக அரங்கில் பட்டியலின மக்களின் உயர்வுக்காக குரல் எழுப்பியாவரும் ஒருங்கிணைந்த சென்னை மகாண சட்ட மன்ற உறுப்பினராக 15 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி எல்லோருக்கும் சமமாக பட்டியல் இன மக்களும் வாழ்வதற்கான தீர்மானங்களை கொண்டு வந்தவருமான இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 160 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு
புரட்சி தமிழகம் கட்சி (பறையர் பேரவை) சார்பாக நிறுவனத் தலைவர் த. மூர்த்தியார் அவர்களின் தலைமையில் கிண்டியில் அமைந்துள்ள இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் உடன் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்