இலவச பல்நோக்கு மருத்துவ முகாம்: கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்

தூத்துக்குடியில் இலவச பல்நோக்கு மருத்துவ முகாம்: கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்
சனி 23,

தூத்துக்குடி அன்னம்மாள் கல்வியியல் கல்லூரியில் இலவச பல்நோக்கு மருத்துவ முகாமை கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி – திருச்செந்தூர் ரோடு அன்னம்மாள் கல்வியியல் கல்லூரியில் சென்னை கற்பக விநாயகா பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை, மதுரை அப்பல்லோ மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்தும் இலவச பல்நோக்கு மருத்துவ முகாம் வருகிற நவ.23, 24ம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த முகாமினை திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமையில் கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்.  திமுக பொதுக்குழு உறுப்பினர் என்பி ஜெகன், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், இளைஞர் அணி செயலளார் மதியழகன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இம்முகாமில் இன்று கற்பக விநாயகா பல் மருத்துவக் கல்லூரி சார்பாக இலவச பல் சிகிச்சை முகாம், பல் எடுத்தல், பல் கட்டுதல், பல் அடைத்தல், பல் சொத்தை நீக்குதல் போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. நாளை 24ம் தேதி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில்  இலவச கண் கிசிச்சை முகாம் நடைபெறும். மேலும் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் இரத்தம் சிறுநீர் பரிசோதனை, இசிஜி, எக்ஸ்ரே, ஸ்கேன், பெண்களுக்கான புற்றுநோய் பரிசோதனை, இலவசமாக செய்யப்படும். இலவசமாக மாத்திரைகள் வழங்கப்படும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது. முகாமில் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.