குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தோடு இணைந்து செயல்படும் கான்சாய் நெரோலாக்

உலகத்தரத்தில் குழந்தைகள் காப்பகத்தை உருவாக்க குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தோடு இணைந்து செயல்படும் கான்சாய் நெரோலாக்
தமிழ்நாடு அரசின் மாண்புமிகு சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சர் டாக்டர். சி. விஜய பாஸ்கர் குழந்தைகள் காப்பகத்தை தொடங்கி வைத்தார்.
ஆரோக்கியமான, இல்லங்களுக்கான பெயிண்ட்டுகளை பயன்படுத்துகிற கலை, செயல்நடவடிக்கைகள் வழியாக பராமரிப்பு சேவையை வழங்குபவர்கள் மற்றும் அவர்களது கவனிப்பின்கீழ் இருக்கிற குழந்தைகளின் வாழ்க்கையை நேர்மறையாக மாற்றுகின்ற உயரிய நோக்கத்தோடு இப்புதிய குழந்தைகள் காப்பகம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்புதிய குழந்தைகள் காப்பகத்தை உயிரோட்டமுள்ளதாக ஆக்குவதற்காக பெங்களுரைச் சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனமான ‘ஏ ஹண்ட்ரெட் ஹேண்ட்ஸ்’ உடன் கான்சாய் நெரோலாக் இணைந்து செயல்பட்டிருக்கிறது.
சென்னை, 2019, மே 31 : தென்கிழக்கு ஆசியாவில் அரசுத்துறையைச் சேர்ந்த குழந்தைகளுக்கான மிகப்பெரிய மருத்துவமனை என்று அறியப்படும் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICH) பணியாற்றுகின்ற அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களுக்காக, உலகத்தரத்தில் ஒரு குழந்தைகள் காப்பகத்தை உருவாக்க இந்தியாவின் முன்னணி பெயிண்ட் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கான்சாய் நெரோலாக் பெயிண்ட்ஸ் லிமிடெட் (KNPL) கூட்டாண்மையாக இணைந்து செயல்பட்டிருக்கிறது. தனது தொழில்நுட்ப தலைமைத்துவ பண்பையும் மற்றும் வண்ணங்களின் அடிப்படையில் சமூக தாக்க செயல்நடவடிக்கைகள் மீதான ஒரு ஆழமான புரிதலையும் நெரோலாக் பெயிண்ட்ஸ் நிறுவனம் இதற்காக சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறது. ள
தமிழ்நாடு அரசின் மாண்புமிகு சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சர் டாக்டர். சி. விஜய பாஸ்கர், புதிதாக உருவாக்கப்பட்ட இந்த குழந்தைகள் காப்பகத்தை தொடங்கி வைத்தார். சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் மருத்துவ கல்வி இயக்குநர் டாக்டர். எட்வின் ஜோ, குழந்தைகள் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர். T. அரசர் சீராளர் மற்றும் கான்சாய் நெரோலாக் பெயிண்ட்ஸ் லிமிடெட்-ன் இயக்குநர் திரு. பிரசாந்த் பாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த குழந்தைகள் காப்பகமானது, இவ்வகையினத்தில் முதல்முறையாக செயல்படுத்தப்பட்டிருக்கும் ஒரு முனைப்பு திட்டமாகும். பிற மருத்துவமனைகளும் இதனை பின்பற்றி செயல்படுத்துவதற்கு ஒரு தர அளவுகோலை இது நிர்ணயித்திருக்கிறது என்றே கூறலாம்.
இந்த உன்னதமான நோக்கத்தை இன்னும் பெரிய அளவிற்கு உயர்த்துவதற்காக, மருத்துவ கல்வி இயக்ககத்துடனும் மற்றும் ICH உடனும் இரு புரிந்துணர்வு (MoUs) ஒப்பந்தங்களில் நெரோலாக் பெயிண்ட் கையெழுத்திட்டிருக்கிறது. இதன் மூலம் முறையே அனைத்து ICH வலையமைப்பு மருத்துவமனைகளில் இதுபோன்ற குழந்தைகள் காப்பக கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான ஒருங்கிணைப்பு பார்ட்னராகவும் மற்றும் குழந்தைகள் காப்பக உட்கட்டமைப்புக்கான அதன் பராமரிப்பு பார்ட்னராக இந்த பிராண்டை குறிப்பிட்டும் நெரோலாக் பெயிண்ட்ஸ் நியமனம் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த முனைப்புத்திட்டம் குறித்து பேசிய மருத்துவ கல்வித்துறை இயக்குநர் டாக்டர். எட்வின் ஜோ, “நெரோலாக் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதன் மூலம், அனைத்து ICH மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்களில் இதேபோன்ற குழந்தைகள் காப்பக கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதே எங்களது குறிக்கோளாகவும், செயல்முயற்சியாகவும் இருக்கிறது. இந்த வசதிகளின் மூலம் நமது சுகாதாரத்துறையில் பணியாற்றுகிற மிக அதிக எண்ணிக்கையிலான பணியாளர்கள் சிறப்பான பலன் பெற முடியும். உலகத்தரம் வாய்ந்த குழந்தைகள் காப்பகத்தை இங்கு உருவாக்குவதில் ICH மற்றும் நெரோலாக்-ன் மிக விரிவான பணியானது, பிற மருத்துவமனைகளும், நிறுவனங்களும் இதனை பின்பற்றி செயல்படுத்துவதற்கு ஒரு தர அளவுகோலை நிர்ணயித்திருக்கிறது,” என்று கூறினார்.

ICH இயக்குநர் டாக்டர். A T அரசர் சீராளர் பேசுகையில், “எமது மருத்துவமனை பணியாளர்களுக்காக இந்த குழந்தைகள் காப்பகத்தை கான்சாய் நெரோலாக் பெயிண்ட்ஸ் லிமிடெட் ஒத்துழைப்பு செயல்பாட்டை மேற்கொண்டதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். ICH வலையமைப்பு 500-க்கும் அதிகமான சுகாதார சேவை பணியாளர்களை கொண்டிருக்கிறது. அவர்களில் 300 பேர் பெற்றோர்கள். இவர்களது குழந்தைகளுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதையும் மற்றும் பகல்நேர பராமரிப்பு சேவைக்கு எளிதான அணுகுவசதி கிடைப்பதையும் இந்த குழந்தைகள் காப்பகம் ஏதுவாக்கும். இந்த குழந்தைகள் காப்பகத்தில் உட்புற அலங்காரத்தை செய்வதில் கான்சாய் நெரோலாக், ஓவியர்கள் குழுவோடு இணைந்து மிகப் பிரமாதமான பணியை செய்திருக்கிறது. எமது பணியாளர்களின் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான மற்றும் உத்வேகமளிக்கிற சூழல் அமைவிடமாக இதனை அது ஆக்கியிருக்கிறது,” என்று கூறினார்.

குழந்தைகள் காப்பகம் தொடக்கம் குறித்து கன்சாய் நெரோலாக் பெயிண்ட்ஸ் லிமிடெட், நிதிப்பிரிவு இயக்குநர் திரு. பிரசாந்த் பாய் அவர்கள் கூறுகையில், “நெரோலாக்-ல் வாழ்க்கையை மாற்றுவதற்கு உதவக்கூடிய யோசனைகள் மற்றும் முனைப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதை நோக்கி நாங்கள் தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம். இந்த குழந்தைகள் காப்பகம் உரு பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய மருத்துவக்கல்வி இயக்ககம் மற்றும் ICH-க்கு நாங்கள் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம். இது தனித்துவ செயல்பாட்டு நன்மைகளுடன் ஆக்கப்பூர்வமான மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு வண்ணங்கள் மற்றும் பெயிண்ட்களின் மாற்றும் சக்தியை குறிப்பிடத்தக்க வகையில் எடுத்துக்காட்டுவது ஆகும்,” என்றார்.

திரு பிரசாந்த் பாய் மேலும் கூறுகையில், “நாங்கள் குழந்தைகளின் நலன் மற்றும் படைப்புத்திறன் வளர்ச்சியை கருத்தில்கொண்டு, எங்களுடைய உள் மாசுகட்டுப்பாடு, காற்று தூய்மைப்படுத்தல், புறதாழ் LOC, மணமின்மை, ஈயமில்லா கழுவக்கூடிய பெயிண்ட்கள் பயன்படுத்தி எங்கள் NGO கூட்டுவகிப்பு அமைப்பு உதவியுடன், கோந்த், பீல் மற்றும் மதுபானி போன்ற பாரம்பரிய கலைவடிவங்களில் சிறப்பு பெற்ற கைவினைஞர்களடங்கிய ஒரு குழுவினரால் கைவினையப்பட்ட கலைநயங்களின் மூலம் குழந்தைகள் காப்பகத்தை ஒரு ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான் குடியிருப்பு இடமாக நாங்கள் மாற்றியுள்ளோம்,” என்றார்.
புதியதாக தொடங்கப்பட்ட இந்த குழந்தைகள் காப்பகம் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் மற்றும் இன்னும் பலர் போன்ற மருத்துவமனையில் பணியாற்றும் பெண்களுக்கு பயனுகந்ததாக இருக்கும். இந்த குழந்தைகள் காப்பகம் பிறந்த, மழலைக்குழந்தைகள் தளர்நடைக் குழந்தைகள் முதல் 13-14 வயது பிரிவைச் சேர்ந்தவர்கள் வரை ஒரு பாதுகாப்பான மற்றும் ஈடுபாடுடைய இடத்தைக் கொடுக்கின்றது. பல்வேறு வயதுப்பிரிவுகளைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு ஏற்ற கலைப்பண்புக்கூறுடைய வடிவமைப்புகளை வடிவமைப்பதற்கு நாடு முழுவதுமுள்ள பாரம்பரிய கலை வடிவங்களிலிருந்து NGO-வை சேர்ந்த கலைஞர்கள் உத்வேகம் பெற்றனர். பல்வேறு வயதுப்பிரிவுகளைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு உணர்வுகள் மற்றும் ஆற்றல்களை கருத்தில்கொண்டு ஒவ்வொரு அறைக்கு பிரகாசமான மற்றும் மகிழ்ச்சிகரமான கடல் மற்றும் காடு என்ற கருப்பொருள்கள் தேர்வுசெய்யப்பட்டன.