கொரோனா – பாதுகாப்பு கருவி: மருத்துவப் பணி கடவுளுக்கான பணி என தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் செவிலியர்கள்

 

 

கொரோனா – பாதுகாப்பு கருவி:


மருத்துவப் பணி கடவுளுக்கான பணி என தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் தங்கள் பணிகளை இனிதே செய்து வருகின்றனர். அவர்களின் துயர் நீங்க எங்களின் முயற்சிதான் கொரோனாவில் செவிலியர் பாதுகாப்பு கருவி. இதுபோன்ற இக்கட்டான சூழல்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து செவிலியர்களுக்கு முடிந்த அளவில் பாதுகாப்பு அவசியமானதாகும் . அவ்வப்போது நோயாளிகளின் நலனில் முன்னேற்றம் உள்ளதா என தெரிந்து கொள்ள நோயாளிகளின் அறைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்த கருவியை பயன் படுத்தலாம். நோயாளிகள் தங்கள் இருப்பிடத்திலே இருந்து செவிலியர்களுக்கு அழைப்பு விடுப்பதன் மூலம் அவர்களின் அவ்வப்போது தேவைகளுக்கு மட்டுமே செவிலியர்கள் சென்று உதவலாம் .
இந்த கருவி மருத்துவமனையில் உள்ள அணைத்து படுக்கைகளையும் இணைக்கும் வயர்லெஸ் தொழில் நு ப்பம் கொண்டு அமைக்கப்பட்டதாகும். இதை ஒரு முறை அழுத்துவதனால் மருந்துகள், இரண்டு முறை அழுத்துவதனால் தண்ணீர் மற்றும் உணவு, மூன்று முறை அழுத்துவதன் மூலம் அவசர உதவி என நோய் தோற்று உள்ளவர்கள் சுலபமாக அவர்களின் தேவையின்போது செவிலியர்களுக்கு அழைப்பு விடுக்கலாம். நாங்கள் இந்த கருவியை எங்கள் அலுவலகத்தில் பல மாதங்கள் சோதனை செய்துள்ளோம். மேலும் இதனை மருத்துவமனையில் பொருத்த 5 நிமிடங்களே ஆகும். இந்த கருவி தற்போதைய சூழலுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என நம்புகின்றோம்.