சாத்தங்குளத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்கும்…அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பேட்டி

சாத்தங்குளத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்கும்…அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பேட்டி

சென்னை புளியந்தோப்பில் குடிசை மாற்று வாரியத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரனா வார்டை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆய்வு செய்தார்

புளியந்தோப்புகுடிசை மாற்று வாரியத்தில் நோயாளிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்ட அமைச்சர் காலை உணவை சுவைத்துப் பார்த்தார் மேலும் அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்

கொரனோ கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தி உள்ளார் அதற்கான ஆலோசனைகளையும் முதல்வர் வழங்கி வருகிறார்

திருவிக நகர் மண்டலம் சூப்பர் என பாராட்டும் அளவில் உள்ளது… முதலிடத்தில் இருந்த திருவிக நகர் தற்பொழுது சென்னையில் திருவிக நகர் 6வது இடத்தில் உள்ளது

நோயாளிகளை கண்டறிந்து மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறோம் மேலும் நோயாளிகளுடன் தொடர்புடையவர்களை அதிகாரிகள் சிறப்பாக கண்டறிந்து வருகிறார்கள் இதன் மூலமாக தொற்றிலிருந்து மிக விரைவாக மீண்டு வருகிறது

நோயாளிகளை தேடி உணவுகள் சென்று சேர்க்கப்படுகிறது சிறப்பான உணவும் வழங்கப்படுகிறது வீடுகளில் வழங்கப்படும் உணவுகளை விட சிறப்பான உணவு வழங்கப்படுகிறது

தொற்றிணை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய அதிக கவனம் செலுத்தி வருகிறோம்

நோயாளிக்கு கொடுக்கப்படும் உணவினை சாப்பிட்டு பார்த்தோம் சுவையாக உள்ளது

1400படுகைகள் இந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது

சென்னை கீழ்ப்பாக்கம் ராஜீவ்காந்தி மருத்துவமனை உள்ளிட்ட 4மருத்துவ கல்லூரியின் மேற்பார்வையில் இந்த இடம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

எந்த ஒரு பேரிடரையும் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்..இதற்கு முதலில் தேவை நம்பிக்கை தான்…இதன் மூலம் தான் வெற்றி பெற வேண்டும்

இந்த தொடருக்கான நெறிமுறைகள் முன்பு இருந்ததில்லை தற்போதுதான் மருத்துவர்கள் மூலம் நெறிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன

எனவே குற்றம் சொல்லுபவர்கள் தொற்று பரவல் குறைந்த பின்பு இது பற்றின விவாதத்தை வைத்துக்கொள்ளலாம் தேவையின்றி கருத்துகள் கூறும் பொழுது மக்கள் மனதில் தேவையற்ற அச்சம் ஏற்படுகிறது

சாத்தான்குளம் விவகாரம் பொறுத்தவரையில் விசாரணை நடைபெற்று வருகிறது விசாரணைக்கு பின்பு முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார்